தீராத பிரச்சனையை தீர்க்கும் முருகப்பெருமானின் மிளகாய் தூள் அபிஷேகம்
இந்த உலகத்தில் நாம் சந்திக்கின்ற துன்பத்தில் இருந்து விடுபட ஒரே ஆறுதல் இறை வழிபாடு தான். இறைவன் இருக்கின்றான் என்ற நம்பிக்கையில் தான் நடப்பவை எல்லாம் அவன் பார்த்து கொள்வான் என்ற நிம்மதியில் தூங்கி எழும்புகின்றோம்.
அப்படியாக, கலியுக வரதன், கண் கண்ட தெய்வம் முருகன் அவன் உண்மையில் துயர் தீர்ப்பவன் தான். அவனை வழிபாடு செய்து பல மாறுதல்களையும் அதிசயமும் சந்தித்தவர்களுக்கு அப்பன் முருகனின் அருள் தெரியும்.
அப்படியாக, முருகப்பெருமானுக்கு நாம் பால் அபிஷேகம், தேன் அபிஷேகம் என்று பல்வேறு அபிஷேகம் பார்த்து இருப்போம். அதில் பலரும் அறிந்திடாத முக்கியமான அபிஷேகம் ஒன்று இருக்கிறது. அது தான் மிளகாய்தூள் அபிஷேகம்.
அந்த மிளகாய் தூள் அபிஷேகம் செய்வதனால் நாம் பல்வேறு நலன்கள் பெறலாம் என்கிறார்கள். அப்படியாக, வருகின்ற 28.04.2025 அன்று திங்கட்கிழமை மாலை 7 மணி மேல் சென்னை பெரும்பாக்கத்தில் வெற்றி வேல் முருகன் ஆலயத்தில் இந்த மிளகாய் தூள் அபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்த அபிஷேகத்தில் கலந்து கொள்வதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அதனால் இந்த அபிஷேகத்தில் கலந்து கொள்ள பல்வேறு பகுதியில் இருந்து முருக பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
இன்னும் அந்த அபிஷேகம் பற்றிய சிறப்பு தகவல்களையும் சிறப்புகளையும் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் சம்பத் அவர்கள். அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |