முருகப்பெருமானுக்கு உரிய 7 அபிஷேகங்களும் அதன் அற்புத பலன்களும்
கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமான் பக்தர்களின் துன்பத்தை போக்கி இன்பத்தை வழங்கக்கூடியவர். அந்த வகையில் முருகப்பெருமானுக்கு பல அபிஷேகங்கள் கோயில்களில் நடத்தப்படுகின்றன.
அவ்வாறாக ஒவ்வொரு அபிஷேகங்களுக்கு பின்னாலும் ஒவ்வொரு அற்புத பலன்கள் இருக்கிறது. அந்த வகையில் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய துயரம் விலக முருகப் பெருமானுக்கு என்ன அபிஷேகங்கள் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.
1. மஞ்சள் அபிஷேகம்:
முருகப்பெருமானுக்கு செய்யப்படும் இந்த மஞ்சள் அபிஷேகமானது குங்குமம் மஞ்சள் தூள் மற்றும் மஞ்சள் நீர் கொண்டு செயப்படும் முக்கிய அபிஷேகமாகும். அதாவது வீடுகளில் யாருக்கேனும் உடல் உபாதைகள் ஆரோக்கிய குறைபாடுகள் என்றால் முருகப்பெருமானுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து அதை பார்த்து நாம் மனமுருகி வழிபாடு செய்திட முருகப்பெருமானின் அருளால் நம்முடைய ஆரோக்கிய குறைபாடுகள் மற்றும் வீடுகளில் தீய சக்திகளை ஏதேனும் சூழ்ந்து இருந்தால் விலகி மங்களகரமான சூழ்நிலை உருவாகும்.
2. பால் அபிஷேகம்:
முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் கட்டாயம் குடும்பத்துடன் சேர்ந்து செய்வது குடும்பத்தில் உள்ளவர்களின் அனைத்து கஷ்டங்களும் விலகி ஒற்றுமை உண்டாகும்.
3. தயிர் அபிஷேகம்:
நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் முருகப்பெருமானுக்கு தயிர் அபிஷேகம் செய்து அவரை கண்வழிபாடு குளிரசெய்தால் குடும்பத்தில் விரைவில் குழந்தை சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கை.
4. தேன் அபிஷேகம்:
ஒரு சிலருக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் இருக்கும். குடும்பங்களில் அடிக்கடி சண்டைகள் கணவன் மனைவி இடையே நிகழ்ந்து கொண்டிருக்கும். மேலும் எதிரிகள் தொல்லையால் அவஸ்தை போன்றவற்றை சந்திப்பவர்கள் கட்டாயம் முருகப் பெருமானுக்கு தேன்அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் விரைவில் அவர்களுக்கு நல்ல ஒரு நிவாரணம் கிடைக்கும்.
5. நெய் அபிஷேகம்:
குடும்பத்தில் கடன் சுமை குறைந்து நிம்மதியான வாழ்க்கை பெற நெய் அபிஷேகம் செய்தால் கட்டாயம் முருகன் அருளால் நால் மாற்றம் கிடைக்கும்.
6. கரும்புச்சாறு அபிஷேகம்:
குணமாகாத நோய்களோடு வாழ்பவர்கள் கட்டாயம் நம்பிக்கையோடு முருகப்பெருமானுக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் அவர்களுக்கு முருகப்பெருமானின் அருளால் விரைவில் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
7. பஞ்சாமிர்தம் அபிஷேகம்:
ஒரு சிலருக்கு வியாபாரத்தில் தொடர் நஷ்டங்கள் வந்து கொண்டிருக்கும். அவர்கள் கட்டாயம் முருகப் பெருமானுக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் அவர்கள் வியாபாரம் முருகன் அருளால் நல்ல முன்னேற்றம் அடைந்து லாபம் பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







