தீரவே தீராது என்ற பிரச்சனையை கூட தீர்க்கும் சக்தி வாய்ந்த முருகன் மந்திரங்கள்
கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமான் பக்தர்களுக்கு எப்பொழுதும் துணை நின்று துயர் துடைப்பவராக இருக்கிறார். அதாவது ஒரு பழமொழி சொல்வார்கள் "சுக்கிற்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்பிரமணியத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்று.
இவை முற்றிலும் உண்மை என்று சுப்பிரமணிய சுவாமியை வழிபாடு செய்பவர்களுக்கே தெரியும். ஆக கலியுக வரதன் முருகப்பெருமானை பொறுத்தவரையில் எப்பொழுது எங்கிருந்து வருவான் என்று தெரியாது ஆனால் பிரச்சனை முற்றும் பொழுது எங்கிருந்தோ ஒரு வடிவில் வந்து நம்மை காப்பாற்றுவார்.
மேலும், சத்தியத்திலும் சத்தியம் தீராத பிரச்சனையும் முருகன் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்தால் தீர்ந்துவிடும் என்பதுதான்.
ஆக உங்களுடைய குடும்பங்களில் ஏதேனும் ஒரு பெரிய பிரச்சனை உங்களை தினமும் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது என்றால் முருகப்பெருமானை மனதார நினைத்து இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்யுங்கள். கட்டாயம் அந்த பிரச்சனையின் தாக்கம் வெகு விரைவில் குறைந்து வீட்டில் நிம்மதி உண்டாகும்.
முருகன் மூல மந்திரம் :
"ஓம் சரவண பவாய நமஹ"
முருகன் ஸ்லோகம் :
"ஞான சக்திதர ஸ்கந்தா
வள்ளிகல்யாண சுந்தரா
தேவசேனா மண காந்த
கார்த்திகேயா நமோ ஸ்துதே
ஓம் சுப்ரமணியாய நமஹ"
முருகன் காயத்ரி மந்திரம் :
"ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாஸேனாய தீமஹி
தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்"
துன்பம் போக்கும் முருகன் மந்திரம் :
"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே"
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







