இணைந்தே வரும் கிருத்திகை - சஷ்டி: 12 ராசிக்கும் முருகபெருமான் சொல்லும் செய்தி
தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரதங்களில் ஒன்று தான் இந்த கிருத்திகை விரதம்.
கிருத்திகையும் சஷ்டியும் அடுத்தடுத்து வருவது ஜோதிட ரீதியில் இன்னும் சிறப்பு வாயந்ததாக கருத்தப்படுகின்றது.பங்குனி மாத சோமவார கிருத்திகை விரதம் இன்று மார்ச் 23ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. நாளை சஷ்டி திதி வருகின்றது.

முருகப் பெருமானின் அருளை பெற ஏராளமானவர்கள் விரதம் இருந்து வழிபடுவது உண்டு. குழந்தை வரம், குடும்ப நலம், செல் வளம், திருமண ஆகியவற்றிற்காக பலரும் கார்த்திகை விரதம் இருப்பார்கள்.
ஆனால் கிருத்திகை நட்சத்திரத்தில் முருகனை வேண்டி விரதம் இருந்தால் கவலைகள் மற்றும் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இந்த நல்ல நாளில் 12 ராசிகளுக்கு முருகப்பெருமான் சொல்லும் செய்தி என்ன என்பது குறித்து இந்த காணொளி வாயிலாக அறிந்துக்கொள்ளலாம்.