முதலையின் வயிற்றுக்குள் இருக்கும் அனுமனின் சிற்பம்
முதலையின் வயிற்றுக்குள் இருக்கும் அனுமன் சிற்பத்தை பார்க்கவே ஆச்சிரியமாக இருக்கிறது.திருவரங்கம் சேஷராயர் மண்டபத்தில் இடது புற ஓரம் வரிசையாக இருக்கும் தூண்களில் தசாவதாரச் சிற்பங்கள் உண்டு.
அந்த ஒரு தூணில் இருந்த ஒரு காட்சி முதலையின் வயிற்றுக்குள் இருக்கும் அனுமனின் சிற்பம்.அந்த சிற்பத்திற்கு பின் இருக்கும் கதையை பற்றி பார்ப்போம்.
மூர்ச்சையாகி விழுந்து கிடைக்கும் லக்ஷ்மணனைக் காப்பாற்ற சஞ்சீவினி மூலிகையை எடுத்துவரச் செல்லும் அனுமனை எப்படியேனும் தடுத்து நிறுத்தும்படி இராவணன் விடுத்த கட்டளையின் பேரில் காலநேமி எனும் அரக்கன் ஒரு முனிவர் வேடம் கொண்டு வழியில் அனுமனைப் பார்த்து அங்கே இருக்கும் குளத்தில் குளித்து வந்தால் தான் பல விஷயங்களை சொல்லுவதாக சொன்னாராம்.
அந்தக் குளத்தில் சாபத்தினால் முதலையாக இருந்த கந்தர்வ கன்னிகை அனுமனை விழுங்க, முதலையின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு தனக்கு எந்த வித சேதாரமும் இல்லாமல் வெளியே வந்தாராம்!
சாபம் நீங்கப் பெற்ற அந்த கந்தர்வ கன்னிகையும் இந்தச் சிற்பத்தில் இருக்கிறார். சாபம் நீங்கிய அந்த கன்னிகை முனிவர் கபட வேடம் அணிந்தவர் என்பதையும் சொல்லிவிட, காலநேமி என்கிற அந்த அரக்கரையும் அழித்து பின்னர் சஞ்சீவினி மூலிகையை மலையுடன் கொண்டு வந்து இலக்குவனை காப்பாற்றினார் என்பது கதை
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |