ஒருவரின் வாழ்க்கையை மாற்றிய நாடி ஜோதிடம்... நடந்த அதிசயமும் உண்மைகளும்
ஜோதிடம் என்பது கிரகங்களுடைய நிலவர அடிப்படையில் ஒருவருடைய எதிர்காலம், நிகழ்காலம் பற்றிய கணித்து தெரிந்து கொள்ள உதவும் ஒரு பாரம்பரிய நம்பிக்கையாகும்.
அந்த வகையில், ஜோதிடத்தில் பல வகைகள் இருக்கிறது.
அதில் நாடி ஜோதிடமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நாடி ஜோதிடத்தைப் பற்றி முக்கியத்துவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல நாடி ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ ரங்கராஜன் சுவாமிகள்.
அவர்கள் அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்.
பொதுவாக, நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள் அவர்களுடைய கிரக தோஷங்களை தெரிந்து கொண்டு அதற்குரிய பரிகாரங்களை செய்கின்ற பொழுது வாழ்க்கையில் அதற்குரிய மாற்றங்களை பெறலாம் என்பது நம்பிக்கை பெறலாம் என்கிறார்கள்.

அதற்கு உதாரணமாக ஒரு விவசாயி நிலம் சார்ந்த தொழில் முன்னேற்றத்தையும், குடும்ப பிரச்சனைகளை சந்தித்து வந்த ஒரு தம்பதியினர் மீண்டும் இணைந்ததை பற்றியும் அவர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
மேலும், அந்த ஓலைச்சுவடிகள் தூய பழங்கால தமிழில் எழுதப்பட்டு இருப்பதாகவும் அதனை வாசிக்கின்ற பொழுது இறைவனுடைய வாக்கு அவர்களுடைய நாக்கில் இறங்கி ஜோதிடம் பார்ப்பவர்களுக்கு சென்று சேர்வதாகவும், அவர் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
மேலும், இந்த நாடி ஜோதிடத்தை சிறுவயதில் இருந்து அவர் தாத்தாவிடம் கற்றுக்கொண்டு பிறகு இறைவனுடைய அருளால் 12 வயதிலிருந்து நாதி ஜோதிடம் பார்க்க துவங்கி விட்டதாகவும் நம்மோடு நாடி ஜோதிடம் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.
மேலும், அதனுடைய தகவல்களை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |