2026: முடிவிற்கு வரும் வக்ர புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு நல்ல மாற்றம் காத்திருக்கிறது

By Sakthi Raj Nov 09, 2026 07:12 AM GMT
Report

ஜோதிட ரீதியாக புதன் பகவான் தான் ஒருவருக்கு கல்வி, ஞானம், கணக்கு, எழுத்து பேச்சு ஆகியவற்றிக்கு காரணியாக இருக்கிறார். அந்த வகையில், நவம்பர் 13ஆம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைய இருக்கிறார்.

இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகளுக்கு பெரிய அளவில் நன்மை கிடைக்கப் போகிறது. அவர்களுக்கு வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல திருப்புமுனையும், முடிவிற்கு வராத காரியங்களில் நல்ல மாற்றங்கள் பெற போகிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026: முடிவிற்கு வரும் வக்ர புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு நல்ல மாற்றம் காத்திருக்கிறது | 3 Zodiac Gets Luck From Mercury Retrograde 2026

09 நவம்பர் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு எப்படி உள்ளது?

09 நவம்பர் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு எப்படி உள்ளது?

மிதுனம்:

மிதுன ராசியின் அதிபதியே புதன் பகவான் தான். இவர்களுக்கு புதன் பகவானுடைய வக்ர நிவர்த்தி கல்வி ரீதியான விஷயங்களில் வெற்றி வாய்ப்புகள் தேடிக் கொடுக்கும். உடன்பிறந்தவர்களுடைய ஆதரவை பெறுவீர்கள்.

புதிய நபர்களால் வாழ்க்கையில் நல்ல மாற்றம் பிறக்கும். கணவன் மனைவி இடையே மட்டும் அனுசரித்து செல்வது அவசியம். நீண்ட நாட்கள் மனதை வருடிய கவலைகள் யாவும் விலகக் கூடிய காலகட்டம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி:

கன்னி ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். இவர்களுக்கு புதன் பகவானுடைய இந்த வக்ர நிவர்த்தி புதன் பகவானுடைய முழு அருளையும் பெற்று கொடுக்க போகிறது. புதிய வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறப்போகிறது.

உங்களுடைய திடீர் செயல்கள் நல்ல மாற்றத்தை கொண்டு வர போகிறது. இருப்பினும் புதிய உணவுகளில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமணத்தில் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்கள் யார்?

சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமணத்தில் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்கள் யார்?

துலாம்:

துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். இவருக்கு புதன் வக்ர நிவர்த்தியால் நற்பலன்களை கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இருந்து வந்த தடை விலகும்.

கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும். பொருளாதார சிறப்பாக அமைவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விலகி சென்றவர்கள் கூட விரும்பி வந்து பேசக்கூடிய ஒரு அற்புதமான காலகட்டமாக இருக்க போகிறது. சமுதாயத்தில் செல்வாக்கு உயரும். 

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US