நாக தோஷமாக மாறும் முன் ஜென்மம் பாவங்கள்

By Sakthi Raj Jun 30, 2024 08:00 AM GMT
Report

நம் வாழ்க்கையில் செய்யும் செயல்கள் அனைத்தும் கண்காணிக்க படுகிறது.அதில் நம் செய்யும் பாவங்கள் அனைத்தையும் எமதர்மனின் உதவியாளரான சித்திரகுப்பதன் கணக்கு எடுத்து கொண்டு இருப்பார்.

ஒருவர் நல்ல விஷயம் செய்ய அது புண்ணியத்தில் வந்து சேரும்,அதுவே கெட்ட விஷயம் செய்தால் பாவங்களில் சேர்ந்து விடும்.அந்த பாவங்கள் அனைத்தும் மறுபிறவி என்று இருந்தால் தோஷமாக மாறி அதற்கான பலனை தரும்.

நாக தோஷமாக மாறும் முன் ஜென்மம் பாவங்கள் | Naga Thosham Sivan Chenagalpattu Pavangal Palangal

அதிலும் செய்த பாவங்கள் நாக தோஷமாக மாறினால் நாம் செய்யும் செயல்களில் தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.உலகத்தில் என்ன செய்கின்றமோ அது திரும்ப வந்து நம்மை சேரும். அப்படியே இருந்தாலும்,ஒருவர் அந்த செயலில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைத்தால் அதற்கான மோட்சம் தேடலாம்.

சோழர்களை காத்த குலதெய்வம் பற்றி தெரியுமா?

சோழர்களை காத்த குலதெய்வம் பற்றி தெரியுமா?

அந்த மோட்சம் பரிகாரத்திற்கான பலனாக கோயில்கள் இருக்கிறது. இதைப் போக்கும் பொருட்டு சிவன் செங்கல்பட்டு மாவட்டம் மேலையூரில் நாகபரணீஸ்வரர் என்னும் பெயரில் இருக்கிறார்.

ஸ்ரீதேவி,பூதேவியுடன் வரதராஜப்பெருமாளின் சன்னதியும் சரஸ்வதியுடன் பிரம்மாவின் சன்னதியும் உள்ளன. இங்கு மும்மூர்த்திகள் இருப்பது சிறப்பு.

நாக தோஷமாக மாறும் முன் ஜென்மம் பாவங்கள் | Naga Thosham Sivan Chenagalpattu Pavangal Palangal

ராதா, ருக்மணியுடன் கிருஷ்ணர், வலம்புரி விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், மகாலட்சுமி, சித்ர குப்தர் என பல சன்னதிகள் உள்ளன.

ராகு காலத்தின் போது வில்வார்ச்சனை செய்தால் நாக தோஷம் தீரும். அதோடு பெரிய நாயகி அம்மனை வலம் வந்து 'இனி தாத்தா, பாட்டிக்கு தேவையான உதவிகளை செய்வேன்' என வாக்கு அளியுங்கள்.

அப்படி செய்தால் ராகு, கேதுவுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது. இத்தலத்திற்கு மற்றொரு சிறப்பு உண்டு. அபிேஷகத்தின் போது மூலவர் சிலை சற்று சாய்வாக இருப்பதை காண முடியும்.

இங்கு புளியமரம் தல விருட்சமாக உள்ளது. ஆக நடக்கும் செயல்களுக்கு மனம் வருத்தம் அடையாமல் அதற்கான தீர்வை தேடி இறை வழிபாடு செய்து நற்பயனை அடைந்து வாழ்வை செம்மையை ஆக்கி ஈசனடி பாதம் பணிவோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US