சோழர்களை காத்த குலதெய்வம் பற்றி தெரியுமா?

By Sakthi Raj Jun 30, 2024 06:38 AM GMT
Report

சோழர்கள் என்றாலே வீரத்திலும் சைவ சமயத்திலும் சிறந்தவர்களாக இருந்தனர்.அவர்கள் எப்படி வீரத்தில் சிறந்து விளங்கினார்களோ அதே போல் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கினார்கள்.அப்படியாக சோழர்கள் போருக்கு செல்லும் முன் மறவாமல் இறைவனை பிராத்தித்து செல்வது உண்டு.

நாம் அனைவர்க்கும் குல தெய்வம் இருப்பது சோழர்களுக்கும் ஒரு பெண் குலதெய்வம் இருந்து அவர்களை காப்பாற்றி வந்து இருக்கிறார்கள்.அதை பற்றி பாப்போம்.

சோழர்களை காத்த குலதெய்வம் பற்றி தெரியுமா? | Solargal Kula Deivam Pandiyargal

சோழர்களுடைய வம்சத்தை காப்பாற்றிய குலதெய்வம் பெண் குலதெய்வம்.

அந்த குலதெய்வத்தின் பெயர் நிசும்பசூதனி ஆகும் இந்த அம்பாள் தான் சோழர்களை காப்பாற்றிய குலதெய்வம் ஆகும். முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற அரகர்கள் அரசர்களாக ஆட்சி செய்துக் கொண்டு வந்தார்கள்.

அவர்கள் தேவர்களையும், ரிஷிகளையும், மக்களையும் கொடுமைப்படுத்தி வந்தனர். இதனால் இவர்கள் துர்கை அம்மனிடம் சென்று முறையிட்டனர். அம்மன் உக்ரரூபம் எடுத்து சும்பன், அசும்பனை அழித்ததால் அம்பிகைக்கு நிசும்பசூதனி என்ற பெயர் வந்தது.

சோழர்களை காத்த குலதெய்வம் பற்றி தெரியுமா? | Solargal Kula Deivam Pandiyargal

அதாவது சோழர்களுக்கு நிசும்பசூதனி தான் குலதெய்வம் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இதனை உறுதி செய்கிறது. சும்பன், நிசும்பனை அழித்த நிசும்பசூதனிக்கு சோழர்கள் கோவில் எழுப்பி வழிப்பட்டனர் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.

கி.பி 850ல் உறையூரில் சிற்றரசனாக பதவியேற்ற விஜயாலய சோழன் பின்பு தஞ்சையை ஆண்ட முத்தரையர்களை வீழ்த்தி தலைநகரை பழையாறையில் இருந்து தஞ்சைக்கு மாற்றினார்.

பாவங்கள் போக்கும் மலர்களின் மகிமை

பாவங்கள் போக்கும் மலர்களின் மகிமை


அங்கே தனது வெற்றிக்கு காரணமான நிசுபசூதினிக்கு கோவில் அமைத்தார்.

எப்போதும் தனக்கு வெற்றியை வழங்க வேண்டும் என்று வேண்டியதும் அன்னை தோன்றி வரமளித்தார் என்று வரலாறு கூறுகிறது. அதன் பிறகு சோழநாட்டை காவல்புரிய எட்டுத்திக்கிலும் அட்டக்காளிகளை பிரதிஷ்டை செய்தார். சோழர்கள் நிசும்பசூதனியை வழிப்பட்ட பிறகே ஒவ்வொரு போருக்கும் செல்வார்.

சோழர்களை காத்த குலதெய்வம் பற்றி தெரியுமா? | Solargal Kula Deivam Pandiyargal

பின் சோழர்கள் திருப்புயம்பூரில் பாண்டியர்கள் பல்லவர்களை வெற்றிக்கொண்டு சோழர்கள் பேரரசு நிர்மாணம் செய்யப்பட்டது. பின்பு வந்த அனைத்து சோழ மன்னனும் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் அம்பாளை வழிப்பட்ட பிறகே போருக்கு சென்று வெற்றியோடு திரும்பினர்.

இப்படி தங்கள் வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனி அம்மனை சோழர்கள் குலதெய்வமாக வணங்கினர். அவளே தஞ்சையை காக்கும் காவல் தெய்வமும் ஆனாள்.

1200 வருடம் பழமையான இந்த கோவில் தஞ்சாவூரில் கீழவாசலில் இருக்கும் பூமால் ராவுத்தர் கோவில் தெருவில் தான் அமைந்துள்ளது. இன்றைக்கும் நிசும்பசூதனி அம்மன் சிலை பொலிவு மாறாமல் காணப்படுகிறது.

இந்த சிலை ஆறடி உயரத்திற்கும் மேல் இருக்கும். இந்த கோவிலின் இன்னொரு பெயர் வடபத்திரக்காளியம்மன். தஞ்சை செல்லும்போது கண்டிப்பாக இந்த கோவிலுக்கும் சென்று நிசும்பசூதனியை வழிபட்டுவிட்டு வாருங்கள்.

சோழர்களுக்கு எப்படி வெற்றியை வாரி வழங்கினாளோ அதேபோல நமக்கும் கட்டாயம் வெற்றியை தருவாள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US