நவகிரக தோஷத்தில் இருந்து விடு பட நம் வீட்டில் போட வேண்டிய கோலங்கள்

By Sakthi Raj Apr 15, 2024 11:39 AM GMT
Report

கோலம் போடுவது என்பது நம் வீட்டை அலங்கரிப்பது மட்டும் அல்லாமல் நம் வீட்டிற்கு லட்சுமி கடாக்ஷம் சேர்ப்பவை ஆகும் .அப்படியாக வீட்டு பூஜையறையில் நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொறு வகையான கோலங்களை போடுவது வழக்கம்.

கோலங்களில் பலவகை உண்டு, ஹ்ருதய கமலம் ,நவகிரக கோலங்கள், ஐஸ்வர்ய கோலம், ஸ்ரீ சக்கர கோலம் என்று பல வகையான கோலங்கள் உண்டு. இதில் அதில் குறிப்பாக நவக்கிரகத்திற்கென்று தனிப்பட்ட கோலங்களும் உண்டு.

நவகிரக தோஷத்தில் இருந்து விடு பட நம் வீட்டில் போட வேண்டிய கோலங்கள் | Nagiraga Thosham Kolam Poojaiarai

ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கோலம் வீதம் வாரத்தின் ஏழு நாட்களுக்கும் ஒவ்வொரு கோலம் போடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்தந்த நாளுக்குரிய கோலங்களை பூஜையறையில் போட்டு இறைவனை வழிபட்டால் நவக்கிரகங்களினால் ஏற்படும் தோஷங்கள், நவகிரகங்களின் கெடுதல் பலன்களிலிருந்தும் விடுபடலாம்.

தாலி கட்டும் பொழுது மூன்று முடிச்சு போடுவதின் காரணம் என்ன?

தாலி கட்டும் பொழுது மூன்று முடிச்சு போடுவதின் காரணம் என்ன?


ஹ்ருதய கமலம், நவகிரக கோலங்கள், ஐஸ்வர்ய கோலம், ஸ்ரீ சக்கர கோலம் போன்றவற்றை மஞ்சள் பொடியினாலும், அரிசி மாவினாலும் மட்டுமே போடுவது குடும்பத்திற்கு நற்பலனை தரும். காவி பட்டை போட்டு கோலம் போடுவது சிவசக்தியை குறிக்கும்.

நவகிரக தோஷத்தில் இருந்து விடு பட நம் வீட்டில் போட வேண்டிய கோலங்கள் | Nagiraga Thosham Kolam Poojaiarai

மங்களமான நாட்களில் இதை போட வேண்டும்.சகல நன்மை தரும். ஒரு இழை கோலம் போட கூடாது .இரட்டை இழை கோலம் போடுவது மங்களம் சிறக்கும் . கோலங்களில் தெய்வீக யந்திரங்களுக்கு சமமான கோலங்களை பூஜை அறையில் மட்டுமே போடவேண்டும் .

படி கோலத்தின் நான்கு மூலைகளிலும் போடும் தாமரை திசை தெய்வங்களின் ஆசியை பெற்று தரும் .வாசல் படிகளில் குறுக்கு கோடுகள் போடக் கூடாது நவகிரக கோலங்கள் நம்முடைய வாழ்வில் வரும் இன்ப ,துன்பம் அனைத்தும் நவகிரகங்களின் செய்கையால் நடக்கிறது .ஆதலால் நாம் ஒவ்வொரு தினத்திற்கும் உரிய நவக்கிரக கோலத்தினை பூஜையறையில் போட்டு நன்மை பெறுவோம் .

நவகிரக தோஷத்தில் இருந்து விடு பட நம் வீட்டில் போட வேண்டிய கோலங்கள் | Nagiraga Thosham Kolam Poojaiarai

ஞாயிறு அன்று போடப்படும் கோலம் சூரிய பகவானுக்கு போடுவது.
திங்கள் கிழமை சந்திரன் பகவானுக்கு போடுவது
செவ்வாய் கிழமை செவ்வாய் பகவானுக்கு போடுவது
புதன் கிழமை புதன் பகவானுக்கு உரியது .
வியாழக்கிழமை குரு பகவானுக்கு போடுவது
வெள்ளிகிழமை சுக்கிர பகவானுக்கு உரிய கோலம்
சனி கிழமை சனி பகவானுக்கு உரியது

இப்படி கோலங்கள் போட நாம் நவக்கிரக தோஷத்தில் இருந்து விரைவில் விடு படலாம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US