தாலி கட்டும் பொழுது மூன்று முடிச்சு போடுவதின் காரணம் என்ன?
திருமணம் உண்மையில் சொர்க்கத்தில் நிச்சியக்கப்பட்டது தான்.நம் முன்னோர்கள் சொல்லி கேட்டிருப்போம் அதாவது இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் அன்றே எழுதிருப்பான் என்று ,அது தான் திருமணம்.விதி எங்கே எப்படி முடிச்சி போட்டு வைத்திருக்கும் என்பது கல்யாணம் யோகம் வரும் வேளையில் தான் தெரியும்.
அப்படியாக மாப்பிளை பொண்ணு பேசி பிடித்திருக்கு என்று சம்மதம் தெரிவித்த உடன் திருமணம் ஆனதாக இல்லை. அதற்கென பல சாஸ்திரங்கள் இருக்கிறது.
அப்படியாக திருமணத்தில் மிக முக்கிய நிகழ்வாக இருப்பது தாலி கட்டுவது.இந்த நிகழ்வு மணமகன் மண மகளுக்கு போடும் மூன்று முடிச்சில் தான் திருமண வாழ்க்கை தொடங்குகிறது. இப்படி இந்த மூன்று முடிச்சு போட்டு வாழ்க்கையில் அடுத்த கட்டம் நகர்வத்திற்கு தான் பலரும் காத்திருக்கின்றனர்.
திருமணம் நிகழ்வு என்பது வாழ்க்கையில் கிடைக்கும் பாக்கியம்.அப்படியாக அந்த திருமணத்தில் போடும் மூன்று முடிச்சிகளுக்கான காரணம் . அதில் எத்தனை சுவாரசியம் அமைந்திருக்கிறது என்று பார்ப்போம்.
விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்னும் மூன்று நிலைகளை இந்த முடிச்சுகள் குறிக்கும். இந்த மூன்று நிலையிலும் ஒரு பெண் தெய்வீக உணர்வுடன் இருக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மை மிக்கவளாக திகழ வேண்டும்.
தெய்வ பக்தி, குடும்ப பெரியவர்களிடம் மதிப்பு, கணவரிடம் அன்பு ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். மேலும் அறம், பொருள், இன்பம் படி வாழ்க்கை நடத்துவோம் என்பதைக் குறிப்பதற்கு மூன்று முடிச்சு.
பிறகு பிரம்மா, விஸ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பெயரால் உறவை உறுதிப்படுத்துவது. கணவன், மூத்தோன், இறைவன் ஆகிய மூவரின் சொற்படி நடக்க மூன்று முடிச்சு .
அம்பிகையின் மகிமையைப் போற்றும் லலிதா சகஸ்ர நாமத்தில், காமேச பந்த மாங்கல்ய சூத்ர சோபிதா கந்தரா என்று அம்பிகை போற்றப்படுகிறாள். சிவபெருமானால் கட்டப்பட்ட திருமாங்கல்யச்சரடு அலங்கரிக்கும் அழகான கழுத்தை உடையவள் என்பது இதன் பொருள்.
ஆயிரமாயிரம் ஆபரணங்களை அணிந்தாலும் அம்பிகைக்கு அழகு சேர்ப்பது மாங்கல்யம் சூடியிருக்கும் மஞ்சள் கயிறு தான். ஆதிசங்கரர், சவுந்தர்யலஹரியில் அம்பாளின் திருமாங்கல்ய மகிமையைப் போற்றுகிறார். எத்தனை நகை அணிந்தாலும், சம்பிரதாயத்தின் சின்னமான மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யத்தைக் கட்டிக்கொள்வதே சிறப்பு என்பதை இது உணர்த்துகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |