பொதுவாக தமிழர்கள் வாழும் பகுதியில் கோயில்களுக்கு பஞ்சமே இருக்காது.
அந்த வகையில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணத்தில் உள்ள கோயில்கள் ஒன்றாக நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் பார்க்கப்படுகின்றது.
இந்த கோயில், உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டதால் கோவிலின் அம்மன் சன்னதியை சக்தி பீடமாக பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். வழமையான நாட்களை விட இக்கோயிலின் திருவிழா காலங்களில் அதிகமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
இந்த காலப்பகுதியில் கோயிலில் பகல் மற்றும் இரவு நேரத்தில் அன்னதானம் வழங்கப்படும்.
இந்த கோயிலை பார்ப்பதற்காக வெளியூர்களிலிருந்து திரளான மக்கள் வருவார்கள். இவர்கள் வந்து தங்கி செல்வதற்காக தங்கமிட வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கோயிலின் சிறப்பு கருதி தமிழர்களை போல் இலங்கை நாட்டு சிங்களவர்களும் வந்து செல்வதாக கூறப்படுகின்றது.
இது போல் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் பற்றி வேறு என்னென்ன சிறப்புக்கள் இருக்கின்றன என்பது பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.
பழங்காலம் முதல் தமிழ் - நாகர் இனத்தவர்களின் முக்கிய வழிபாட்டு இடங்களில் நயினாதீவும் ஒன்றாக இருக்கின்றது.
இந்த கோயிலை நாகர்கோயில், நாகதேவன்துறை, நாகதீவு உள்ளிட்ட பெயர்களாலும் அழைப்பார்கள். நாகர் இனத்தவர்களில் முக்கிய வழிபாட்டுத்தலமாக காணப்பட்ட இந்த கோயில நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் என தற்போது அழைக்கப்படுகின்றது.
ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கருவறையில் சீறும் ஐந்தலை நாகச்சிலை, பல்லாயிரமாண்டுகள் வாய்ந்தது என ஆய்வுகளில் கூறியுள்ளனர்.
மேலும், தமிழர்களின் பெறுமைக்காக்கும் வரலாற்றுக் குறிப்புகள், சாசன ஆதாரங்கள், தமிழ் இலக்கியத் தொடர்புகள், கர்ண பரம்பரைச் கதைகள், புராண வரலாறுகள் என அனைத்திலும் இந்த கோயில் முக்கிய பங்கு வகின்றது.
கோயில் தோன்றியதற்கான வரலாற்றுக்கதை
இந்திரன் தனது சாபம் நீங்கிய பின்னர் அம்மனுக்காக சிறிய ஆலயமொன்றை கட்டியுள்ளான். அந்த சமயத்தில் அம்மனுக்கு பூப்பறிப்பதற்காக கடல்வழியாக வரும் வேளையில் நாகதம்பிரான் செல்கிறான்.
இடையில் வந்து வழிமறித்த கருடன் நாகத்தை கொள்ள முயன்றான். அப்போது வணிகரான மாநாய்க்கன் பிணை தீர்த்து நாகத்தை வழிபடச்செய்தான்” என்ற கதை உள்ளது.
அதே போல் பீலிவளை - சோழ வேந்தன் இருவருக்கும் பிள்ளையாக பிறந்தவர் தான் தொண்டமான் இளந்திரையன். இவனுடைய பரம்பரை வாயிலாக வந்தவர்களாக தொண்டைமான் சந்ததியினர் என கதைகள் கூறுகின்றன.
விஷேசங்களின் பட்டியல்
- அழகிய சித்திரத்தேரில் பவனி
- 5ம் நாள் குடைத்திருவிழா
- 7ம் நாள் வாயுபட்சணிடி என்ற சர்ப்பத்தில் வீதியுலாக்காட்சி
- 10ம்,13ம் நாள் கையிலைக்காட்சி
- 10ம் நாள் இரவு திருமஞ்சத்தில் எழுந்தருளி வீதியுலா
- 11ம் நாள் காலை ஆலய வரலாறுடன் தொடர்புடைய கருட/சர்ப்பபூசை (பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய பூந்தண்டிகையில் வீதியுலா)
- 13ம் நாள் இரவு சப்பரத்திருவிழா
- 15ம் நாள் அம்பாள் ஊர்மனையூடாக வெளியே காவிச்சென்று ஊரின் மேற்குப் பக்கமாக இருக்கும் கங்காதரணி தீர்தக்கேணியில் தீர்த்தமாடல் விழா
- 16ம் நாள் அம்பாள் அழகிய மின்குமிழிகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி கடலினிலே தெப்பத்திருவிழா
மேலும், நவராத்திரி, கேதாரகௌரி விரதம், வரலட்சுமி விரதம் ஆடிப்பூரம், கந்தசஷ்டி,பிள்ளையார் பெருங்கதை,திருவெம்பாவை போன்ற விழாக்களும் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |