நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று தொடக்கம்- திரளும் பக்தர்கள் LIVE
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை இடம்பெறவுள்ள கொடியேற்றத்துடன் மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், கொடியேற்றத்துக்காக சம்பிரதாயப் பூர்வமாகக் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நேற்று நடைப்பெற்றுள்ளது.
வருடாந்த மகோற்சவம்
செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.
அதன்படி, யாழ். சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து சிறிய தேர் ஒன்றில் கொடிச்சீலை பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து செல்லப்பட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்து.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







