நம் குறைகளை தீர்க்கும் நடராஜர் பத்து
சிவ பக்தர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது தில்லை கூத்தனே என்று சொல்லாமல் இருக்கமாட்டார்கள். சிவனின் இன்னொரு தோற்றமே கூத்தன்.
அதாவது கூத்தன் என்பதற்கு வடமொழியில் நடராஜர் என்பது பொருள். நடராஜர் நடன கலைஞர்களின் அரசன் ஆவார்.
இது தவிர கூத்தன், சபேசன், அம்பலத்தான் ஆகிய பெயர்களும் நடராஜரையே குறிக்கும். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களுக்கு தலைவனாக விளங்குபவன் சிவ பெருமானே என்பதை குறிப்பதே நடராஜர் ரூபத்தின் தத்துவம்.
சிவ பெருமான் மேல் பல நாயன்மார்கள் புலவர்கள் பாடல்கள் பாடி இருக்கின்றனர் அது அனைத்துமே மனம் உருகி கண்ணீர் ததும்பும் பாடலாக இருக்கும்.
ஆனால் நடராஜர் பத்து பாடலை பாடும் பொழுது மனதில் உள்ள துயரம் விலகி தெளிவு பிறப்பதாக அமைந்து இருக்கும்.
அதிலும் தேவாரம் திருவாசகம் கருத்துக்கள் நிறைந்த பாடலாக நடராஜர் பத்து இருக்கிறது.
இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளை பாடும் போதே நம் மனதில் உள்ள கவலைகள் எல்லாம் படி படியாக குறைவது போல் இருக்கும்.
மேலும் இப்பாடலை பாடும் போது நம்மை அறியாமல் மனதிற்குள் தெம்பும் தைரியமமும் வரும்.
மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ
மறை நான்கின் அடிமுடி யும்நீ
மதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீ
மண்டல மிரண்டேழும் நீ
பெண்ணும்நீ ஆணும்நீபல்லுயிர்க் குயிரும்நீ
பிறவும்நீ ஒருவன் நீயே
பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்ற தாய் தந்தை நீயே
பொன்னும் நீ பொருளும்நீ இருளும்நீ ஒளியும்நீ
போதிக்க வந்த குரு நீ
புகழொணாக் கிரகங்கள் ஒன்பதும்நீ இந்தப்
புவனங்கள் ஈன்றவனும் நீ
எண்ணரிய ஜீவகோடி களீன்ற அப்பனே
என் குறைக ளார்க்கு ரைப்பேன்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லை வாழ் நடராஜனே
இப்பாடலில் கடைசி வரியில் ஈசனே சிவகாமி நேசனே என்று வரும் அதாவது சிவன் இல்லையேல் சக்தி இல்லை என்பதை உணர்த்தும் வகையில் பாடலின் முடிவில் பாடி இருப்பார்.
இந்த பாடலை திருவள்ளூர் அருகே உள்ள சிறுமணவை ஊரில் முன்னூற்றி இருபது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முனுசாமி என்பவரால் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் மீது பாடப்பட்ட பாடல்.
இந்த பாடலை கேட்கும் போதே இவர் சிவன் மீது எத்தனை அன்பு வைத்திருப்பார் என்பது தெரியும்.
இந்த பாடலை தினம் கேட்டாலே புத்துணர்ச்சி பிறக்கும், நம் குறைகள் தீரும்.