தோஷங்கள் விலக நடராஜர் இடது பாத தரிசனம்
தில்லை நடராஜர் தரிசிக்க அத்தனை சிவ பக்தரும் ஆசை கொள்வார்கள். ஆடல் நாயகனின் அழகும் வடிவும் பார்த்து கொண்டே நின்று அவனை சரணடைய செய்யும்.
ஆடல் நாயகனை நினைத்தாலே மோட்சம் கிடைக்கும்.அதிலும் அவரின் இடது பாத தரிசனம் செய்ய பல நன்மைகள் நடக்கிறது என்கின்றனர்.அதை பற்றி பார்ப்போம்.
சிதம்பரத்தில் நடராஜ பெருமாள் தனது இடது பாதத்தை வளைந்து தூக்கி திரு நடனம் ஆடியதற்கு குஞ்சிதபாதம் என்று பெயர். இந்த தரிசனத்தை பார்த்தாலே தீராத வியாதியும் நீங்கும் என்கின்றனர்.
அதாவது சிவபெருமான் இடது பாகத்தில் சக்திதேவி இருக்கிறார். அதனால்தான் எமதர்மராஜன் மார்க்கண்டேயனை துரத்தி பாசக்கரை வீசியபோது மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை கட்டி இறுக பற்றி கொண்டார்.
அப்போது எமனின் பாச கயிறு சிவலிங்கத்தின் மேல் பட்டது. இதனால் கோபம் அடைந்த சிவபெருமான் எமனை தடுத்து காலால் எட்டி உதைத்தார்.
தாயும் தந்தையுமான சிவசக்தியை மார்க்கண்டேயன் சரண் அடைந்ததால் சிவபெருமான் சக்திதேவியின் அம்சமான தனது இடது பாகத்தில் உள்ள பாதத்திலும் எமனை எட்டி உதைத்தார். அந்த இடது கால் சக்தி தேவியின் அம்சம் என்கிறது புராணம்.
அதனால் ஆடல் நாயகனை தரிசிக்கும் போது கண்டிப்பாக இடது காலை தரிசிக்க வேண்டும். அப்படி தரிசிக்கும் பொழுது செய்வினை பாதிப்பு, சனீஸ்வரால் ஏற்படும் தொல்லை ,ஜாதகத்தில் பொதுவாக இருக்கும் தோஷங்கள், வியாதிகள் நீங்கும் என்கின்றனர். மேலும் ஆடல் நாயகனை தரிசனம் செய்ய மனம் தெளிவடைந்து உடல் வலிமை பெறும் என்கிறது சாஸ்திரம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |