நவராத்திரி 9 நாட்களும் அம்பிகையின் அருளை பெற இந்த முறையில் பூஜை செய்யுங்கள்

Report

   நவராத்திரி என்பது சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்ற தொடர் நிகழ்வாக கொண்டாடப்படும் விழாவாக இருக்கிறது. மேலும் நவராத்திரி ஒன்பது நாட்களும் அம்பிகைக்கு பல்வேறு விதமான பூஜைகளும் வண்ண நிறங்களில் ஆடைகளும் அணிவித்து வழிபாடு செய்வது அவசியமாகும்.

காரணம் நவராத்திரி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தையும் ஒவ்வொரு வழிபாட்டையும் அம்பிகையின் ஒன்பது அவதாரங்களையும் நமக்கு எடுத்துரைப்பதாகும். அப்படியாக நவராத்திரி ஒன்பது நாட்களும் நாம் எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்? எந்த நிறங்களை கொண்டு அம்பிகைக்கு ஆடைகள் அணிவித்து பூஜைகள் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

நவராத்திரி 9 நாட்களும் அம்பிகையின் அருளை பெற இந்த முறையில் பூஜை செய்யுங்கள் | Navaratiri 9 Days Worship And Colors In Tamil

நவராத்திரி ஒன்றாம் நாள்:

செப்டம்பர் 22 ஆம் தேதி அன்று நவராத்திரி முதல் நாள் தொடங்குகிறது. இந்த நாளில் மஞ்சள் நிறத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்யவேண்டும். மஞ்சள் என்பது மகிழ்ச்சி ஆனந்தத்தை குறிக்கக்கூடிய ஒரு நிறமாகும். ஆதலால் இந்த நிறத்தில் அம்பிகையை அலங்காரம் செய்து பூஜைகள் செய்வது நன்மை அளிக்கும்.

நவராத்திரி இரண்டாம் நாள்:

செப்டம்பர் 23ஆம் தேதி அன்று பச்சை நிறத்தில் நாம் அலங்காரம் செய்வது வாழ்வில் பல செல்வ செழிப்புகளை சேர்க்கிறது. பச்சை நிறம் என்பது இயற்கை வளர்ச்சி அமைதி ஆகியவை குறிக்கக்கூடிய நிறமாகும். இவை வாழ்க்கையின் புது தொடக்கங்களை குறிப்பதாகும். ஆகையால் இந்த நாளில் அம்பிகைக்கு பச்சை நிற ஆடை அணிவித்து பூஜை செய்வது சிறப்பை தரும்.

நவராத்திரி மூன்றாம் நாள்:

செப்டம்பர் 24ஆம் தேதி அன்று சாம்பல் நிறத்தில் அம்பாளுக்கு ஆடை அணிவித்து பூஜை செய்வது நமக்கு வாழ்க்கையில் சமநிலைகளை பெற்றுக் கொடுக்கிறது.

நவராத்திரி நான்காம் நாள்:

செப்டம்பர் 25ஆம் தேதி அன்று ஆரஞ்சு நிறத்தில் வழிபடுவது சிறப்பானதாகும். இந்த நிறமானது உற்சாகம் அரவணைப்பு என்ற குணங்களை எடுத்துரைக்கிறது. இந்த நிறத்தில் நாம் அம்பாளுக்கு ஆடை அணிவித்து பூஜை செய்யும் பொழுது மனதில் உற்சாகம் பிறக்கிறது.

நவராத்திரி ஐந்தாம் நாள்:

செப்டம்பர் 26 ஆம் தேதி அன்று வெள்ளை நிறத்தில் அம்பாளுக்கு ஆடை அணிவித்து பூஜை செய்வது மிகச் சிறப்பை பெற்று கொடுக்கும். அதாவது வெள்ளை என்பது தூய்மை அமைதி நன்மை ஆகியவை குறிக்கக்கூடிய நிறமாகும். இந்த நிறத்தில் நாம் அம்பாளுக்கு ஆடை அணிவித்து பூஜை செய்யும் பொழுது நம்முடைய மனதில் உள்ள குழப்பங்கள் மன அழுத்தங்கள் இவை அனைத்தும் விலகுகிறது.

மிக பெரிய சாதனையாளராக வர பகவத் கீதை சொல்லும் வழி

மிக பெரிய சாதனையாளராக வர பகவத் கீதை சொல்லும் வழி

நவராத்திரி ஆறாம் நாள்:

செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று சிவப்பு நிற சேலை அணிவித்து அம்பாளுக்கு பூஜை செய்வது மிகச்சிறந்த பலனை பெற்று கொடுக்கும். அதோடு சிவப்பு அம்பாளுக்கு மிகவும் பிடித்த மற்றும் உகந்த நிறமாகும்.

நவராத்திரி ஏழாம் நாள்:

செப்டம்பர் 28ஆம் தேதி அன்று அடர் நீல நிறத்தில் அம்பிகைக்கு ஆடை அணிவித்து பூஜை செய்வது நம்முடைய குடும்பத்தில் தெளிவையும் அமைதியையும் பெற்றுக் கொடுக்கும்.

நவராத்திரி எட்டாம் நாள்:

செப்டம்பர் 29ஆம் தேதி இளஞ்சிவப்பு நிறத்தில் அம்பாளுக்கு ஆடை அணிவித்து பூஜை செய்வது நமக்கு பல்வேறு சிறப்புகளைப் பெற்றுக் கொடுக்கிறது. இந்த நிறம் ஆனது அழகான மற்றும் அன்பு காதல் ஆகியவற்றை குறிக்கக்கூடிய ஒரு தன்மை கொண்டது. இந்த நிறத்தில் நாம் ஆடை அணிவித்து பூஜைகள் செய்வது நமக்கு பலவிதமான நன்மைகளை பெற்றுக் கொள்கிறது.

நவராத்திரி ஒன்பதாம் நாள்:

செப்டம்பர் முப்பதாம் தேதி அன்று மயில் பச்சை நிறத்தில் அம்பாளுக்கு ஆடை அணிவித்து பூஜை செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். பச்சை நிறம் என்பது அழகான மற்றும் தனித்தன்மையை குறிக்கக்கூடிய நிறமாகும்.

மேலும் நவராத்திரி ஒன்பது நாட்களும் ஷைலபுத், பிரம்மசாரிணி, சந்திரகாந்தா, கூஷ்மந்தா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, கல்ராத்ரி, மகாகௌரி, சித்திதாத்திரி என்று ஒன்பது சக்தி அவதாரங்கள் கொண்டு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் செய்யப்படுகிறது. 

ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதல் மூன்று நாட்கள் பார்வதி தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபாடு செய்து கொண்டாடப்படுகிறது.

ஆதலால் இந்த நவராத்திரி தினத்தை பயன்படுத்தி அம்பிகையின் 9 அவதாரங்களையும் நாம் மனதில் நிறுத்தி வழிபாடு செய்து வந்தால் நம் வாழ்க்கையை பல்வேறு நன்மைகளை பெறலாம்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US