திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இணையான திருத்தலம்
பொதுவாகவே முருகன் அவனை பார்த்தாலே நின்று பார்த்து கொண்டே இருக்கலாம் அது முருகப்பெருமானின் சிறப்பு.முருகன் ஓர் பார்வையில் நம்முடன் பேசுவது போல் இருக்கும். முருகன் கோயில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு.
அப்படியாக எப்பொழுதும் மிகவும் கூட்டம் நெரிசலான வீதியில் கோயில் அமைந்து இருப்பதால் வெளியில் இருந்து பார்க்கும் பொழுது கோயில் மிக பரபரப்பாய் காணப்படும்.
ஆனால் கோயில் உள் சென்று முருகனை பார்த்த நொடி பொழுதில் நம்மை மறந்து உலகம் மறந்து அவரோடு ஐக்கியம் ஆவது போல் உணர்வு உண்டாக்கிறார்.
நெல்லையில் ஜங்ஷன் கடை ரத விதிகளில் அழகாய் விற்று இருக்கும் முருக பெருமானை நெல்லை சாலை குமார சுவாமி என்று அழைக்கின்றனர்.
மற்ற முருகன் கோவில்களில் மூலவரான சண்முப்பெருமான் தெற்கு நோக்கி அமைந்து இருப்பார்.
ஆனால் இந்த கோவிலில் மூலவரான சண்முகர் கிழக்கு நோக்கி ஆறுமுகத்துடனும்,பன்னிரு கைகளுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் அமைந்து இருப்பது விசேஷமான ஒன்றாகும்.
இந்தத் திருத்தலம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இணையான ஸ்தலம் என்பதால், இந்தக் கோவிலின் அமைப்பு மற்றும் இங்கு நடைபெறும் பூஜைகள், விழாக்கள் அனைத்து அதைப்போன்றே அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.
நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் தடை உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து இந்த முருகப் பெருமானை வேண்டி சென்றால் அவர்களது வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
மேலும் நம் பரபரப்பான வாழ்க்கை சூழலில் இருந்து விடுபட நிச்சியம் ஒரு முறையாவது நெல்லை சாலை குமார சுவாமியை தரிசிக்க மன கூச்சல்கள் குறைந்து மனம் லேசாவதை பார்க்கமுடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |