நெல்லிக்காய் நெய் விளக்கு ஏற்றுவதால் இத்தனை நன்மைகளா?
வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பது முக்கியமான ஒன்றாகும்.அப்படியாக தினம் வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது நாம் லட்சுமி தேவியின் அருளை பெறலாம்.அதோடு விளக்கு ஏற்றுவதால் நம்முடைய மனக்கவலைகள் அகலும்.வீட்டில் மறைந்து இருக்கும் எதிர்மறை சக்திகள் விலகும்.
குலதெய்வத்தின் அருட்பார்வை பெறலாம் என நிறைய நன்மைகள் விளக்கு ஏற்றுவதால் கிடைக்கிறது. அதோடு நம் அன்றாட வாழ்க்கையில் நிறைய துன்பங்களை சந்திக்கவேண்டியது உள்ளது.அந்த சூழலில் காலை, மாலை இரு நேரமும் விளக்கு ஏற்ற நம் கஷ்டங்கள் படிப்படியாக குறையும்.
விளக்கு என்பது பல வடிவங்களில் இருக்கிறது.நம்முடைய ஒவ்வொரு வேண்டுதலை பொறுத்து ஒவ்வொரு விளக்குகள் ஏற்றுவோம்.அப்படியாக நெல்லிக்காயில் நெய் விளக்கு ஏற்றுவதால் நாம் பெரும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
ஒருவர் நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவதால் துன்பங்கள் நீங்கி இழந்த அனைத்தும் மீண்டும் பெறலாம் என்பது ஜதீகம். அப்படியாக நாம் நெல்லிக்காய் விளக்கு ஏற்ற முதலில் காட்டு நெல்லிக்காயை வாங்கி மேற்புரமாக சற்று பள்ளமாக தோண்டி எடுத்து கொள்ள வேண்டும்.
அதே போன்று கீழ்புறமும் சற்று தட்டையாக இருக்கும் அளவிற்கு வெட்டி எடுத்து விடுங்கள். பின்னர் காட்டன் திரி கொண்டு நெய்யில் நனைந்து, பின்னர் அதனை நெல்லிக்காயில் வைத்து விளக்கேற்றுங்கள். இவ்வாறு விசேஷ நாட்களில் விளக்கு ஏற்றும் பொழுது நாம் இழந்ததை மீண்டும் பெற முடியும்.
அதே போல் சிலர் சொத்துக்களை ஏமாற்றப்பட்டு இழந்து இருப்பார்கள்.அவர்கள் கட்டாயம் நெல்லிக்காய் நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய அவர்கள் இழந்த சொத்தை மீட்டு சந்தோசம் பெறுவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |