விரதம் இருப்பதால் கர்ம வினைகள் குறையுமா?
விரதம் இது இந்து மதத்தில் மிக முக்கியமான விஷேசம் ஆகும்.இந்த விரதமானது பல்வேறு கடவுள்களுக்கு அவர்களின் முக்கிய நாளில் இருக்கும் முக்கிய நிகழ்வாகும்.அப்படியாக இந்த விரதம் என்றால் என்ன?எந்த விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.
விரதம் என்பது நாம் கடவுளை அடைய ஒரு வகையான தவம்.பொதுவாக விரதம் இருப்பவர்கள் கடவுளிடம் ஏதேனும் கோரிக்கை வைத்து அது நிறைவேற அவர்கள் கடுமையாக வழிபாடு செய்வார்கள்.அந்த வகையில் விரதம் இருந்தால் நிச்சயம் நாம் நினைத்தது நடக்குமா?என்று கேட்டால் பலரும் பலவிதமான பதில்கள் சொல்வதை நாம் கேட்க முடியும்.
உதாரணமாக இரண்டு எதிரிகள்,ஒருவரை ஒருவர் வீழ்த்த வேண்டும் என்று கடுமையாக விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்கிறார்கள்.இப்பொழுது கடவுள் யார் பக்கம் நிற்பார்.இருவருமே சரிசமமாக,கடும் விரதம் மேற்கொள்கிறார்களே அப்பொழுது இருவருக்கும் கடவுள் அவர்கள் நினைத்ததை நிறைவேற்ற வேண்டும் அல்லவா?
அங்கு தான் இறைவன் நமக்கு மிக பெரிய பாடம் கற்பித்து கொடுப்பான்.இந்த வேளையில் இருவ்ருக்கும் கர்ம வினைகள் குறைந்து என்ன நடக்கவேண்டுமோ அவை நடக்கும்.ஆனால் யார் வெற்றி அடைவார் என்று கேட்டால்,அவர் அவருக்கு கடவுளுக்கு எதை கொடுத்தால் நன்மையாக அமையுமோ அதை கொடுப்பார்.
இறுதியில் இருவரும் பகையை மறந்து இறைவன் கொடுத்த மற்றொன்றை நினைத்து சந்தோசம் அடைந்து அந்த வழியில் செல்வார்கள். ஆக விரதம் என்பது கடவுளை அடைந்து அவர் காட்டும் வழியில் நடக்க உதவும் அற்புதமான விஷயம் ஆகும்.
விரதம் இருந்தால் வேண்டுதல் நிறைவேறுவதோடு அவர்களுக்கான அகக்கண் திறந்து அறிவு மேம்படும்.பக்தி அதிகரிக்கும். நாம் இப்பொழுது என்ன விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.
பிரதோஷம் - அமைதி, நிம்மதி
மகாசிவராத்திரி - சகல நன்மை சேரும்
விநாயகர் சதுர்த்தி - முன்வினை பாவம் தீரும்
சங்கடஹர சதுர்த்தி - தடைகள் அகலும்
வைகாசி விசாகம் - நினைத்தது நிறைவேறும்
கந்த சஷ்டி - குழந்தை பாக்கியம்
வரலட்சுமி விரதம் - மாங்கல்ய பாக்கியம், நல்ல வாழ்க்கை துணை
வைகுண்ட ஏகாதசி - மோட்சம்
திருவோணம் - குடும்ப மகிழ்ச்சி
கிருஷ்ண ஜெயந்தி - செல்வம் பெருகும்
பௌர்ணமி - வேலைவாய்ப்பு நோய் நீங்குதல்
அமாவாசை - பித்ரு சாபம், பித்ருதோஷம் நீங்கும்
கார்த்திகை - வாழ்க்கையில் முன்னேற்றம்
ஆக வாழ்க்கையின் ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ப,நாம் விரதங்கள் மேற்கொள்ளலாம்.அவ்வாறு இருக்கும் பொழுது நம் மனதின் குழப்பங்கள் நிச்சயம் விலகும்.நீங்கள் இறைவனை வேண்டி விரதம் இருந்ததற்கான முழு பலனை பெறுவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |