தவறியும் இந்த 7 நபர்களின் கால்களில் மட்டும் விழவே கூடாதாம்.. யார் தெரியுமா?
நம்முடைய இந்து மதத்தில் பாத நமஸ்காரம் என்பது மிகவும் முக்கியமான கலாச்சாரமாக பார்க்கப்படுகிறது. அதாவது குடும்பத்தில் உள்ள தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற பெரியவர்களின் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்து அவர்களுடைய ஆசிர்வாதம் பெறுவது என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் பாத நமஸ்காரம் செய்யும் பொழுது தவறான நபர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் செய்யக் கூடாது. அவை நமக்கு எதிர்மறை தாக்கத்தை கொடுக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. அப்படியாக எந்த நபர்களின் கால்களில் நாம் தவறியும் விழுந்து ஆசீர்வாதம் பெறக்கூடாது என்று சாணக்கியர் சொல்லும் கருத்துக்களை பற்றி பார்ப்போம்.

1. எந்த ஒரு நபர் சமுதாயத்திலும் குடும்பத்திலும் அதர்மத்தோடு நடக்கிறார்களோ அவர்கள் காலில் நாம் ஒருபொழுதும் விழுந்து ஆசிர்வாதம் பெறக்கூடாது. தர்மம் தவறியவர்கள் எவ்வளவு பெரிய உயர் பதவியில் அல்லது செல்வந்தராக இருந்தாலும் கட்டாயமாக அவர்களின் கால்களில் விழும்போது அவர்களுடைய கர்ம வினை நம்மை பாதிக்கிறது.
2. எவர் ஒருவர் பெண்களை மதிக்காமல் அவமானம் செய்தும் தீய சொற்கள் பேசுகிறார்களோ அவர்களின் காலில் விழுந்தும் நாம் ஆசிர்வாதம் பெறக்கூடாது. இவை மிகப்பெரிய பாவத்தை நமக்கு கொடுக்கிறது.
3. ஒரு பொழுதும் தானே உயர்ந்தவன் என்றும் தனக்கு தான் எல்லாம் தெரியும் என்றும் அகங்காரத்தோடு செயல்படுபவர்களின் கால்களிலும் நாம் ஒருபோதும் விழுந்து ஆசீர்வாதம் பெறுதல் கூடாது. பணிவு இல்லாத இடத்தில் ஒரு பொழுதும் ஒருவரை வாழ்த்துவதற்கான மனம் வருவதில்லை.
4. எவரொருவர் நம்பியவர்களுக்கு துரோகம் செய்கிறார்களோ அல்லது நேரம் தகுந்தாற்போல் அவர்களுடைய செயல்பாடுகளை மாற்றுகிறார்களோ அவர்களுடைய கால்களிலும் நாம் ஒரு பொழுதும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கக்கூடாது.
5. சிலர் ஆன்மீகம் என்ற பெயரில் போலியான விஷயங்களில் ஈடுபடுவதை நாம் பார்க்க முடிகிறது. அவர்கள் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவதும் நமக்கு ஒரு பயனும் கிடைக்கப் போவதில்லை. உண்மையான ஞானிகள் எப்பொழுதும் அதை விரும்ப மாட்டார்கள்.
6. எந்த ஒரு மனிதன் சுயநலத்திற்காக எதையும் செய்ய துணிகின்றானோ அவர்கள் காலிலும் நாம் தவறியும் விழுந்து ஆசீர்வாதம் பெறுதல் கூடாது. அவர்களுக்கு எந்த ஒரு நபரையும் மனதார வாழ்த்த கூடிய தகுதி வருவது இல்லை.
7. பணம் மற்றும் அதிகாரம் இருக்கின்றது என்று இல்லாதவர்களை அடிமைப்படுத்தி நடத்தக்கூடியவர்களையும் மக்களிடம் சமநிலையை பார்க்காதவர்களிடம் சென்று நாம் ஒருபொழுதும் கால்களில் விழுதல் கூடாது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |