2026 நவம்பர் 16 சூரிய பெயர்ச்சி: 4 ராசிகாரர்கள் முடிவெடுப்பதில் எச்சரிக்கை தேவை

By Sakthi Raj Nov 12, 2026 11:18 AM GMT
Report

சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் அவருடைய ராசி கட்டத்தை மாற்றுகிறார். அதாவது ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பிலும் அவருடைய இடத்தை மாற்றுகிறார். அந்த வகையில் நவம்பர் 16, 2026 திங்கட்கிழமை அன்று மாலை 7.48 மணிக்கு சூரிய பகவான் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

அன்று தான் கார்த்திகை மாதம் பிறக்கிறது. இந்த பெயர்ச்சி பன்னிரண்டு ராசிகளுக்கும் பல்வேறு விதமான தாக்கங்களை கொடுத்தாலும் ஒரு சில ராசிகள் முடிவெடுக்கும் பொழுது கவனமாகவும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்றும் ஜோதிட ரீதியாக சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026 நவம்பர் 16 சூரிய பெயர்ச்சி: 4 ராசிகாரர்கள் முடிவெடுப்பதில் எச்சரிக்கை தேவை | November 16 Sun Transit November 2026 Predictions

2026: கந்த சஷ்டி விரதம்.. முருகன் அருள் பெற தினமும் கேட்க வேண்டிய பாடல்.

2026: கந்த சஷ்டி விரதம்.. முருகன் அருள் பெற தினமும் கேட்க வேண்டிய பாடல்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானுடைய இந்த இடமாற்றமானது இவர்களுக்கு திடீர் திருப்பங்களை கொடுக்கப் போகிறது. எதிர்பாராத பொறுப்புகளும் வேலை அழுத்தமும் சந்திக்கலாம். ஆதலால், முதலீடுகளில் மிகவும் கவனமாக இருப்பது உங்கள் நன்மையைச் செய்யும்.

உங்களுடைய திட்டங்களை ரகசியமாக வைத்திருப்பது, வெளிப்படையாக ஒருவரை நம்பி பகிர்ந்து கொள்வதை தவிர்க்கலாம். இந்த மாதம் சற்று பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் இலக்குகளை அடைய கடின உழைப்புகளை போட வேண்டிய நிலை வரலாம். பரம்பரை தொடர்பான சொத்துக்கள் விஷயங்களில் முடிவெடுப்பதில் கவனம் வேண்டும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானுடைய இந்த பெயர்ச்சி இவர்களுக்கு தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் திறமைகளில் சிறப்பானதாக இருந்தாலும் அவற்றை சரியாக பயன்படுத்துவது அவசியம். வேலையில் மற்றும் தொழில் ரீதியாக கடின உழைப்பும் எதார்த்தமான திட்டங்களும் தேவைப்படலாம்.

குடும்பத்திலும் வேலை செய்யும் இடங்களிலும் சற்று கடினமாக நடந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. உறவுகள் இடையே சமநிலையை கடைபிடிப்பது நன்மையை கொடுக்கும். எந்த ஒரு சூழலையும் உணர்ந்து அதற்கு ஏற்ப செயல்படுவது நல்லது.

உங்கள் லக்னமே உங்கள் குணத்தைச் சொல்லுமா? ஒவ்வொரு கிரகம் தரும் பலன்கள்

உங்கள் லக்னமே உங்கள் குணத்தைச் சொல்லுமா? ஒவ்வொரு கிரகம் தரும் பலன்கள்

2026 நவம்பர் 16 சூரிய பெயர்ச்சி: 4 ராசிகாரர்கள் முடிவெடுப்பதில் எச்சரிக்கை தேவை | November 16 Sun Transit November 2026 Predictions

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு கார்த்திகை மாதம் தனஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சரிக்கிறார். அதனால் இவர்களுடைய பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது முக்கியம். கடினமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.

தொழில் மற்றும் வேலை தொடர்பாக வரவு செலவுத் திட்டங்களில் மிகவும் கவனமாக இருப்பது நன்மையை கொடுக்கும். தொழிற் தொடர்பாக நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் சற்று பொறுமையும் விடாமுயற்சியும் தேவைப்படலாம். பணம் சம்பாதிக்கும் பொழுது கவனமாக இருப்பது அவசியம்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானுடைய இந்த இடமாற்றமானது மறைமுக செலவுகளை அதிகரிக்கலாம். உங்களுடைய யோசனைகள் மற்றும் செயல்களில் சற்று கவனமாக ஆராய்ந்து செயல்படுத்துவது அவசியம். நீங்கள் எதிர்பார்த்ததை விட உங்களுடைய திட்டங்களை செயல்படுத்துவதில் சுற்று செலவுகள் அதிகரிக்கலாம்.

ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஆர்வமும் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளவும் எண்ணங்கள் உருவாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு மிக மிக முக்கியம். தேவையற்ற சிந்தனை அவசர முதலீடுகளை தவிர்ப்பது நன்மையை செய்யும்.  

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US