2026: கந்த சஷ்டி விரதம்.. முருகன் அருள் பெற தினமும் கேட்க வேண்டிய பாடல்.
கந்த சஷ்டி விரதம் என்பது முருக பக்தர்களால் அனுஷ்டிக்க கூடிய முக்கியமான விரதங்களில் ஒன்றாகும். அந்த வகையில், மகா கந்தசஷ்டி விரதம் துவங்கியிருக்கிறது. முருக பக்தர்கள் பலரும் இந்த காலகட்டங்களில் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள்.
மேலும், ஒருவர் கந்த சஷ்டி விரதம் இருக்க அவர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து அவர்கள் நினைத்த வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை. பலரும் அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறவும், முருகனுடைய முழு அருளைப் பெறவும் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.

அதாவது, நீண்ட நாட்கள் குழந்தையை இல்லை கவலை கொள்ளும் தம்பதிகள், திருமண வரன் அமையாமல் காத்திருப்பவர்கள், நல்ல வேலை இல்லை என்று கவலைப்படுபவர்கள், குடும்பத்தில் சண்டை, கணவன் மனைவி இடையே பிரச்சனை, பொருளாதார சிக்கல் என்று வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை பல முயற்சிகள் கொண்டும் போராடிக்கொண்டிருப்பவர்கள் தங்கள் உழைப்போடு சேர்த்து முருகன் அருளால் வாழ்க்கையில் விரைவில் நினைத்ததை பெற முழு நம்பிக்கையுடன் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.
அப்படியாக, தினமும் கந்த சஷ்டி விரதத்தின் பொழுது திருப்புகழ், கந்த கவசம் பாராயணம் செய்வது அவசியம். அந்த வகையில், இந்த நாட்களில் வீடுகளில் முருக பாடல்கள் ஒலிப்பதற்கு கோல்ட் தேவராஜ் அவர்கள் ஐபிசி பக்தியில் குருவாய் வருவாய் குகனே! என்று அற்புத பாடலை பாடியிருக்கிறார்.
அதனை கேட்டு இந்த மகா கந்த சஷ்டி விரதத்தை இன்னும் சிறப்பானதாக மாற்றுவோம்.
பொறுப்புத் துறப்பு:
இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள வழிபாடு மற்றும் விரத முறைகள் ஆன்மிக நம்பிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் பொதுத் தகவலுக்காக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப வழக்கம் மற்றும் கோயில் மரபுகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாறுபடலாம். உடல் ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் விரதம் மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |