நாள் 1: சூரசம்ஹாரத்தின் பின்னணி என்ன? கந்தன் அவதரித்த கதை தெரியுமா?
மகா கந்த சஷ்டி விரதம் முமுருகப்பெருமானுக்கு உலகம் எங்கிலும் இருக்கக்கூடிய முருக பக்தர்களால் அனுஷ்டிக்கக்கூடிய ஒரு முக்கியமான விரதங்களில் ஒன்றாகும். அப்படியாக, சஷ்டி விரதம் நாம் ஏன் அனுஷ்டிக்கிறோம்?. முருகப்பெருமான் அவதரித்த அந்த புராணங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
சூர சம்ஹாரம் – நாள் 1:
அமாவாசையின் இருள் நீங்கி வளர்பிறை பிரதமை தொடங்கும் இந்த தினத்தில் தான் கந்த சஷ்டி விரதம் துவங்குகிறது. அதன் பிறகு வரக்கூடிய அடுத்த ஆறு நாட்களும் முருக பக்தர்கள் ஒழுக்கத்துடனும், மனத்தூய்மையுடனும் முருகப்பெருமானை வழிபாடு செய்கிறார்கள்.

சூரனின் வரம்:
காசியப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த சூரபத்மன், தாரகாசுரன், சிம்மமுகன் ஆகியோருடன் இணைந்து சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் செய்கின்றான். சிவபெருமானும் அவர்களுடைய தவத்தால் மனம் மகிழ்ந்து வரம் கேட்க அருளுகிறார்.
அதில் சூரன் எனக்கு மரணம் வரக்கூடாது என்று கேட்ட, சிவபெருமான் அது இயலாதது என்கிறார். அதனால் சூரன் பெண்ணின் கருவில் பிறக்காத ஒரு பாலகனால் மட்டுமே எனக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வேண்டுகிறான். அதற்கு சிவபெருமான் சரி என்று வரம் அளிக்கிறார்.

தர்மம் நிலைகுலைதல்:
இவ்வாறு வரம் பெற்ற சூரபத்மன் வீர மகேந்திரபுரத்தை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்ய துவங்குகிறான். பிறகு தேவலோகத்தை கைப்பற்றி ஐராவதம் உள்ளிட்ட தேவச் செல்வங்களை கவர்ந்தான்.
அதோடு மட்டுமல்லாமல் இந்திரனின் உடைய மகன் ஜெயந்தனையும் சிறையில் அடைகிறான்.சூரன் உடைய கொடுமைக்கு தேவர்களும் ரிஷிகளும் ஆளாகி தவித்துக் கொண்டிருந்தன. தர்மம் நிலை குலைந்தது. ஆதலால், எல்லோரும் கைலாயம் சென்று சிவபெருமானை தஞ்சம் அடைந்தனர்.
முருகன் அவதாரம்:
சிவபெருமானும் சூரபத்மனை அழிக்கக்கூடிய நேரம் வந்துவிட்டது என்று அறிந்து அவருடைய ஆறு முகங்களில் நெற்றிக்கண்களில் இருந்து ஆறு அக்னி பொறிகளை வெளிப்படுத்தினார். அவற்றை வாயுவும், அக்னியும் கங்கையில் கொண்டு சேர்த்தனர்.
பிறகு அவை சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் ஆறு அழகிய குழந்தைகளாக தோன்றினார். அவர்களை கார்த்திகை பெண்கள் வளர்ந்ததால் முருகப்பெருமானுக்கு கார்த்திகேயன் என்ற பெயர் உண்டாயிற்று.
பிரகு அன்னை பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைத்துக் கொள்ள அவை ஆறுமுகங்களும் 12 கரங்களும் கொண்ட ஒரே திருமேனியாக இணைந்தது. அவரே ஆறுமுகன், கந்தன், சரவணபவன் என்று போற்றப்படும் முருகப்பெருமானாக பக்தர்களுக்கு இன்று அருள் பாலித்து வருகிறார்.

ஞானவேல் அருள்:
முருகப்பெருமானை தேவர்கள் அவர்களுடைய படை தலைவரான தேவசேனாதிபதியாக முடி சூட்டினார்கள். போருக்கு புறப்படும் தன் மகனுக்கு அன்னை பார்வதி தேவி தன் தன் தபஸ்சக்தியைத் திரட்டி ஞானவேலை அருளுகிறாள்.
அந்த வேல் ஒருவரின் ஆணவம், கன்மம், மாயை என்ற மும் மலங்களையும் அழிக்கும் ஞானத்தின் அடையாளமாக திகழ்ந்தது. அதோடு, தர்மத்தை நிலை நாட்டவும் சூரபத்மனின் அரசை அழிக்கவும் முருகப்பெருமான் போருக்கு புறப்பட்டார்.
விரதத்தின் பொருள்:
அப்படியாக, இந்த கந்த சஷ்டி விரதம் என்பது வெறும் விரதம் இருப்பது மட்டுமல்லாமல் நமக்குள் இருக்கக்கூடிய சூரன் போன்ற ஆணவம், தீய எண்ணங்கள் ஆகியவை முருகப்பெருமானுடைய ஞானவேலால் நீக்கி ஒருமுகப்படுத்துவதே அதனுடைய உண்மையான நோக்கமாகும்.
Disclaimer:
இந்தக் கட்டுரை புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. கதை விவரங்கள் வேறுபட்ட நூல்கள் மற்றும் மரபுகளில் மாறுபடலாம். இது ஆன்மிக மற்றும் பண்பாட்டு அறிவுக்காக மட்டுமே. எந்த வாக்குறுதி அல்லது ஆலோசனையும் ஆல்ல.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |