7,16, 25 நீங்கள் இந்த தேதியில் பிறந்தவர்களா? உங்களுடைய வாழ்க்கை முழு பலன் இதோ
ஜோதிடத்தில் எண் கணிதமும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த எண் கணிதம் கொண்டும் நாம் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். அப்படியாகஎண் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
ஏழு என்கின்ற தேதியில் பிறந்தவர்கள் கேது பகவானின் ஆதிக்கத்தை கொண்டவர்கள். இவர்கள் இயற்கையிலேயே ஆன்மீக சிந்தனை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இவர்களிடம் கடவுள் பாதி மிருகம் பாதி போன்ற கலந்த குணம் பார்க்கலாம்.
இவர்களிடம் இருக்கக்கூடிய மிகப்பெரிய பலவீனம் நிலையான மனநிலையை இவர்களிடம் நாம் காண முடியாது. இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், மன அழுத்தம் ஏற்பட்டு விட்டால் இவர்களால் அதை கையாள்வது சிரமமாக இருக்கும்.
இவர்களுக்கு ஒன்று, இரண்டு, ஆறு ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் பொருத்தமானவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் பெட்ரோல், டீசல், துணி வியாபாரம் அல்லது கமர்சியல் மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் மிகச் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு, 8 என்ற எண் கொண்டவர்கள் சனி இணக்கமான உறவை கொடுக்காது எனவே அவர்களுடன் இணைந்து தொழில் செய்வதை தவிர்ப்பது நன்மை தரும்,
மேலும், இந்த எண்களில் பிறந்தவர்களுக்கு தனிமையே மிகப்பெரிய பலமாக அமைகிறது, மற்றவர்களின் உதவி அல்லது எதிர்பார்ப்புகளை இவர்கள் நம்ப மாட்டார்கள், சுயநலமாக செயல்படுவது இவர்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுக் கொடுக்கும்,
இவர்கள் கணபதி மற்றும் நாக தேவதைகளை வழிபாடு செய்வது மற்றும் கையில் வைடூரியம் கல் அணிவது சிறப்பை பெற்று கொடுக்கும், மன அழுத்தத்தை தவிர்க்க மற்றவர்களின் தவறுக்கு தானாக முன்வந்து பொறுப்பேற்பதையும் தவிர்த்தால் நல்ல பலன் உண்டு,
மேலும், 7, 8, 25 ஆகிய எண்களில் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.