பிடிவாதத்திற்கும் கோபத்திற்கும் பெயர் பெற்ற பெண்கள் - எந்த திகதியில் பிறந்துள்ளனர்?
குறிப்பிட்ட சில பெண்கள் அவர்கள் பிறந்த திகதியின் அடிப்படையில் பிடிவாதமம் கோபமம் அதிகமாக இருப்பவர்கள் என கூறப்படுகின்றது.
எண் கணிதம்
ஜோதிடக்கணிப்பு படி ராசிகளுக்கு ஒவ்வொரு பலன்களை கணித்து வைத்துள்ளனர் ஜோதிடர்கள். அதே போல தான் ஒவ்வொரு திகதியில் பிறந்தவர்களுக்கும் உவ்வொர குணம் ஜோதிடம் மூலமாக கணிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 9 வரை உள்ள ரேடிக்ஸ் எண்களில் குறிப்பிட்ட 3 எண்கள், தங்களின் பிடிவாத குணத்திற்கு பெயர் பெற்றவர்கள். அதிகம் சிந்திக்கும் பழக்கம் கொண்டவர்கள், தனி நபர் சுதந்திரத்தை விரும்புபவர்கள்.
தங்கள் குணத்திற்கு மாறாக விஷயங்கள் நடக்கும் போது, அதனை எதிர்த்து போராடும் குணம் கொண்டவர்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த திகதியில் பிறந்தவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

எண் 1
- எண் கணிதத்தில் எண் 1 கொண்டவர்கள் (1, 10, 19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்) அவர்களின் ஆளுமை பண்புகள் மற்றும் தலைமைப் பண்புக்கு பெயர் பெற்றவர்கள்.
- இந்த எண் சூரியன் ஆளும் எண்ணாக உள்ளது. ‘எண் 1’, சூரியனை போல் ஆக்ரோஷமானவர்கள். அவர்கள் செய்யும் செயல்களுக்கு முன்னர் அது குறித்து தன்னை சுற்றியுள்ளவர்களிடம் கருத்துக்களை கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
- இவாகள் மற்றவர்களை விட அதிகம் சிந்திக்கும் குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த எண் 1, மற்றவர்களின் கருத்துக்களை கேட்டு அறிந்து அதில் இருந்து தனக்கான புரிதலை வளர்த்துக்கொண்டு தன்னிச்சை முடிவுகளை எடுப்பார்கள்.
- அதாவது, மற்றவர்களின் கருத்துக்களை கேட்டாலும், இறுதியில் தனது விருப்பப்படியே இவர்கள் நடப்பார்கள். பணியிடத்தில் ஆளுமை மிக்க பதவியில் இவர்கள் இருப்பார்கள்.

எண் 4
- எந்த ஒரு மாதத்திலும் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ரேடிக்ஸ் எண் 4 ஆகும். இவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் ஆழ்ந்த சிந்தனையாளர்கள்.
- பெரும்பாலும் தனித்து செயல்பட விரும்பும் இவர்கள், தங்கள் பாதையில் வரும் நபர்களை எதிர்த்து போராடவும், தனது லட்சியத்தை நோக்கி பயணிக்கவும் தயக்கம் காட்ட மாட்டார்கள்.
- மற்றவர்களின் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். இவர்கள், மற்றவர்களுக்கு உதவி எந்நேரத்திலும் தயாராக இரு்பார்கள்.
- அதேநேரம், மற்றவர்களுக்கு தான் செய்யும் உதவி, எந்த ஒரு வகையிலும் தன்னை பாதித்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்கள்.
- தனது ஆடை, ஆபரணங்களை தனது சகோதரியிடம் பகிராமல் தவிர்ப்பதில் தொடங்கி, வளர்ந்த பின் தனது உடமைகளை பகிர்ந்துக்கொள்ளாமல் இருப்பது வரை என அனைத்திலும் பிடிவாதமாக, தனித்து செயல்படுவார்கள்.

எண் 9
- எண் 9 இல் பிறந்தவர்களிடம் அதாவது (மாதத்தின் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்) போன்ற இலக்கத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் மிகப்பெரிய எதிர்மறையான குணம் அவர்களின் பிடிவாதம்.
- இந்த பிடிவாதம், அவரகளை மட்டுமல்லாமல் அவர்களை சார்ந்து உள்ளவர்களின் நலனையும் பாதிக்கும். இவர்கள் செவ்வாய் கிரகத்தை ஆளும் இலக்கமாக உள்ளனர்.
- எண் கணித நிபுணர்கள் கூற்றுப்படி இந்த இலக்கத்தில் பிறந்த நபர்கள் அனைத்து விஷயத்திலும் பிடிவாதம் கொண்டவர்கள்.
- தங்களின் தனிப்பட்ட விஷயத்தில் தொடங்கி, தொழில் விவகாரங்கள் மற்றும் குடும்ப வாழ்க்கை என அனைத்திலும் இவாகளுக்கு பிடிவாதம் அதிகம். இதனால் இவர்கள் முன்கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.
- அதாவது, தனது விருப்பத்திற்கு மாறாக ஏதாவது ஒரு விடயம் நகர்ந்து செல்லும் போது, குறித்த அந்த விடயம் செய்த நபரை எதிர்த்து தனது கோபத்தை வெளிப்படுத்துவதும், பிடிவாதமாக நடந்துக்கொள்வதும் இவர்களிடம் காணப்படும் ஒரு குணமாக உள்ளது.