3, 12, 21, 30 ஆகிய தேதியில் பிறந்தவர்களா? இதை செய்தால் பணக்காரர் ஆவது உறுதி
ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியமாக இருக்கிறது. அப்படியாக 3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்கள் குரு பகவானின் ஆதிக்கத்தை பெற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று பார்ப்போம்.
இந்த தேதியில் பிறந்தவர்கள் நிதி சார்ந்த துறை மற்றும் கல்வி தொடர்பான வேலைகள் மற்றும் ஒருவருக்கு ஆலோசனை வழங்கும் வேலைகள் குருவின் ஆத்திகம் இருப்பதால் சிறப்பாக செய்வார்கள்.
மேலும், இவர்களுக்கு 3, 5, 9 ஆகிய கூட்டுத்தொகை கொண்ட தேதிகள் மற்றும் 1, 2, 5, 7 ஆகிய தேதிகள் இவர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. அதேபோல் இவர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறமாக மஞ்சள் மற்றும் பொன்னிறம் இருக்கிறது.
அதை இவர்களை சுற்றி வைத்துக்கொள்ளும் பொழுது நல்ல அதிர்ஷ்டம் தேடி வரும். இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு ஸ்ரீ சக்கரம், ஸ்ரீ சக்கர ஹோமம் மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடு மிகசிறந்த நற்பலனைக் கொடுக்கும். அதேபோல் கனக புஷ்பராகம் அல்லது தூய தங்க ஆபரணங்கள் அணிவது காரியத்தில் வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும்.
குறிப்பாக இந்த எண்ணில் பிறந்தவர்கள் தொழிலில் என்று வரும் பொழுது இவர்கள் 6 மற்றும் 8 ஆகிய எண்களில் பிறந்தவர்களுடன் தொழில் அமைப்பதை தவிர்ப்பது நல்லது. அதேசமயம் இவர்களுக்கு வெள்ளி மற்றும் பிளாட்டினம் போன்ற உலோகங்கள் சிறப்பாக அமையாது.
இவர்கள் எப்பொழுதும் ஒருவருக்கு ஆலோசகராகவும், வழிநடத்துவதிலும் அறிவுரை கொடுப்பதிலும் சிறப்பாக விளங்கக்கூடியவர்கள்.
இவை எல்லாம் விட இவர்களின் வாழ்க்கை மற்றும் குணம் தாமரை இலையில் எப்படி நீர் ஒட்டாதது போல் இருக்கிறதோ அதேபோல் தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படியாக, இந்த எண்ணில் பிறந்தவர்களின் குணம் மற்றும் வாழ்க்கை முறையை எப்படி இருக்கும் என்று இந்த காணொளியில் பார்த்து தெரிந்திக் கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |