8, 17, 26 இந்த தேதியில் பிறந்தவர்கள் இந்த ஒரு தவறை மட்டும் செய்யவே கூடாதாம்
ஜோதிடத்தில் ஒவ்வொரு தேதியில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு வகையான வாழ்க்கை முறை இருக்கிறது. அந்த தேதியை வைத்து கணித்து தெரிந்து கொள்ளக்கூடிய முறையை நாம் எண் கணிதம் என்று சொல்கின்றோம்.
அந்த வகையில், 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம். 8 என்கின்ற எண்ணிற்கு அதிபதியாக இருக்கக்கூடியவர் சனி பகவான். ஆக, இவர்கள் இயற்கையிலே சிறந்த தலைமைத்துவ பண்பு கொண்டவர்களாகவும் புரட்சிகரமான சிந்தனை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
எதையும் தைரியமாக எதிர்த்து பேசக்கூடியவர்கள் இருப்பினும் நேரங்களில் சில கருத்து வேறுபாடுகள் இவர்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு புதன் பகவானை ஆளக்கூடிய எண் 5 மற்றும் சுக்கிர பகவானை ஆளக்கூடிய எண் ஆறு மற்றும் கேது பகவானை ஆளக்கூடிய எண் 7 சாதகமாக இருக்கும்.
இவர்கள் சூரியனின் எண்ணை கொண்டு மற்றும் ராகுவின் எண்களைக் கொண்ட நான்கு ஆகிவற்றை தவிர்ப்பது நல்லது. இவர்களுக்கு இரும்புத் தொழில் இயந்திரங்கள் மற்றும் பூமிக்கு அடியில் செய்யப்படும் வேலைகள் மிகச் சிறப்பான பலன்களை கொடுக்கும். அதே போல் லேசார் மற்றும் மின்சாரம் சார்ந்த தொழில்களும் இவர்களுக்கு அவ்வளவு சிறப்பை கொடுக்காது.
இவர்கள் சனி பகவானுடைய முழு அருளை பெறவும் ருத்ர ஹோமம் செய்வது மற்றும் ஐயப்பன் அல்லது ஆஞ்சநேயர் வழிபாடு மற்றும் ஹனுமன் வழிபாடு ஹனுமன் மந்திரம் ஆகிவை கேட்பது பாராயணம் செய்வது சிறப்பை பெற்ற கொடுக்கும்.
இவர்கள் உடல் நலனைப் பொறுத்தவரை கால் மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட அவசியம். மேலும், பிற எண்களில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பதை இந்த காணொளிகள் பார்த்து தெரிந்து கொள்வோம்
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |