எண் கணிதம்: தொழிலில் சிறந்து விளங்க கோடீஸ்வரர்கள் பின்பற்றும் சூட்சமம் இது தான்

By Sakthi Raj Oct 14, 2026 04:44 AM GMT
Report

ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், எண் கணிதத்தை பின்பற்றி நம்முடைய வாழ்க்கையிலும் தொழிலிலும் முயற்சி செய்தால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

அப்படியாக , எண் நிபுணர் லட்சுமி அவர்கள் 1 முதல் 9 வரைவிலான எண் அடிப்படியில் யாருக்கு எந்த மாதிரியான தொழில்கள் மற்றும் அதிர்ஷ்டம் பெற்றுக் கொடுக்கும் என்று சொல்கிறார்.

அதே போல், ஒருவர் தொழிலுக்காக கொடுக்கக் கூடிய அந்த விசிட்டிங் கார்டு என்ன நிறங்களில் இருக்க வேண்டும்? என்ன குறியீடுகளை பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி விளக்குகிறார். அதைப் பற்றி பார்ப்போம்.

எண் கணிதம்: தொழிலில் சிறந்து விளங்க கோடீஸ்வரர்கள் பின்பற்றும் சூட்சமம் இது தான் | Numerology Secrets To Become A Successful In Life

ஒருவர் தலை எழுத்தையே மாற்றக்கூடிய ராகு பகவான்.. யாருக்கு அதீத நன்மை செய்வார்?

ஒருவர் தலை எழுத்தையே மாற்றக்கூடிய ராகு பகவான்.. யாருக்கு அதீத நன்மை செய்வார்?

எண் 1 (தேதிகள் 1, 10, 19, 28):

இந்த எண் தலைமை பண்பு கொண்டவர்கள். இவர்களுக்கு கட்டுமானம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்கள் இவர்களுக்கு சிறந்ததாக இருக்கும். இவர்கள் இளம் மஞ்சள் மற்றும் அடர் நீல நிறங்கள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

எண் 2 (தேதிகள் 2, 11, 20, 29):

இந்த எண் கொண்டவர்களுக்கு நீர் தொடர்பான தொழில்கள், பால் மற்றும் விவசாயம் ஏற்றதாக இருக்கும். பச்சை நிறம் ஆகியவற்றை இவர்கள் பயன்படுத்தலாம்.

எண் 3 (தேதிகள் 3, 12, 21, 30):

இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு கல்வி மற்றும் ஆலோசனை தொழில்கள் சிறந்ததாக இருக்கும். மஞ்சள் நிறம் மற்றும் 37 என்கின்ற எண் இவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

உங்கள் ராசி படி யாருடன் அதிக அளவில் நேரம் செலவு செய்ய விரும்புவீர்கள் தெரியுமா?

உங்கள் ராசி படி யாருடன் அதிக அளவில் நேரம் செலவு செய்ய விரும்புவீர்கள் தெரியுமா?

எண் 4 (தேதிகள் 4, 13, 22, 31):

இவர்களுக்கு இரும்பு மற்றும் வன்பொருள் சார்ந்து தொழில்கள் சிறப்பாக அமையும். 19 போன்ற அதிர்ஷ்ட எண்களை இவர்கள் தொழிலில் பயன்படுத்தலாம்.

எண் 5 (தேதிகள் 5, 14, 23):

பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புகொள்ள கூடிய சில்லறை வர்த்தகம் இவர்களுக்கு சிறந்ததாக அமையும். 23 போன்ற எண் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும். மேலும், எண் கணித அடிப்படையில் மற்ற எண் கொண்டவர்கள் எந்த தொழில், எந்த நிறம் பயன்படுத்தினால் சிறப்பு என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US