2026 அக்டோபர்: கஜகேசரி யோகத்தால் வாழ்க்கையில் உச்சத்திற்கு செல்லும் ராசிகள்?
ஜோதிடத்தில் கிரகங்களுடைய மாற்றம் 12 ராசிகளுக்கும் பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கும். அந்த வகையில், ஒரு சில கிரக மாற்றங்கள் மிகப்பெரிய அளவில் யோகங்களை கொடுக்கிறது.
அதில் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் மிகவும் சிறந்த யோகமான கஜகேசரி ராஜயோகம் அக்டோபர் நான்காம் தேதி உருவாகுகிறது. இதனால் எந்த ராசிகளுக்கு பெரிய அளவில் செழிப்பு மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்ப்போம்.
இந்த கஜகேசரி ராஜயோகம் என்பது குரு மற்றும் சந்திரன் ஆகியவற்றின் சேர்க்கையால் உருவாகக் கூடியது. இந்த இரண்டும் ஒன்றை ஒன்று சுப பார்வையால் பார்க்கும் பொழுது இந்த ஆற்றல் உருவாகி உள்ளது. இதனால் எந்த ராசிகளுக்கு பெயர், புகழ், நல்ல மாற்றம் உண்டு என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கஜகேசரி ராஜயோகம் ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கப்போகிறது. உயர் அதிகாரிகளிடத்திலிருந்து நீங்கள் பாராட்டுகளும் ஆதரவையும் பெறுவீர்கள்.
தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த நிதி வளர்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்சனைகள் நல்ல முடிவை பெற்றுக் கொடுக்கும்.
மேஷ ராசியினை தவிர்த்து கடகம், சிம்மம், மற்றும் மகர ராசிகளுக்கும் இது கிரக அமைப்பு மிகவும் சாதகமாக இருக்கப் போகிறது.
இந்த நேரங்களில் வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு நல்ல ஊதியமும் கிடைக்கப் போகிறது. பங்கு சந்தை அல்லது ரியல் எஸ்டேட் துறைகளில் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இந்த நான்கு ராசிகளின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும். கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த காலகட்டங்களில் அதிலிருந்து விடுபடக்கூடிய ஒரு நல்ல நிவாரணம் பெறுவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றிகள் கிடைக்கும். செல்வாக்கு மிக்கவர்களுடைய தொடர்பு உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |