நாளைய ராசிபலன் (04-10-2026)
மேஷம்:
இல்லங்களில் நல்ல காரியம் நடைபெறும். மனதில் நினைத்ததை முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி நண்பர்கள் வழியாக நல்ல முறையில் முடியும்.
ரிஷபம்:
உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். குடும்ப பிரச்சனை விலகும். மனதில் ஒரு கலகலப்பான நிலை உண்டாகும்.
மிதுனம்:
இன்று விமர்சன கருத்துக்களை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். திருமண வரன் பார்ப்பதில் சில தாமதங்களும் தடையும் வரலாம். கணவன் மனைவியிடையே அனுசரித்து செல்வது அவசியம்.
கடகம்:
இன்று வேலை பணிகளில் ஒரு மாற்றமான சூழ்நிலை உண்டாகும். மனம் மகிழும் படியான செய்திகள் வந்து சேரும். கருத்துக்களை வெளிப்படுத்தும்போது சிந்தித்து செயல்படுவது அவசியம்.
சிம்மம்:
பணிபுரியும் இடங்களில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் வரலாம். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.
கன்னி:
சகோதரர்களால் ஒரு நல்ல ஒத்துழைப்பு இருக்கும். நினைத்த காரியம் எளிதாக நிறைவேறும். வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்ப பிரச்சினை விலகும்.
துலாம்:
இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் தேவையில்லாத விவாதங்கள் செய்யாதீர்கள். எதிர்பாராத ஆதரவு பெறுவீர்கள்.
விருச்சிகம்:
இன்று பலம் மற்றும் பலவீனங்களை தெரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை அறிந்து செயல்படுவதற்காக புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
தனுசு:
வியாபார பணிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணை வழியே மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். இலக்கியம் குறித்த ஒரு கூடுதல் ஆர்வம் உண்டாகும்.
மகரம்:
எதிர்பாராத பயணங்கள் வழியாக நல்ல மாற்றம் கிடைக்கும். ஆன்மீக பயணம் சாதகமாக அமையும். புதுவிதமான சிந்தனைகள் வரலாம். மனக்குழப்பம் விலகும்.
கும்பம்:
உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபங்கள் நல்ல முறையில் வந்து சேரும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழ்நிலை சாதகமாக இருக்கும்.
மீனம்:
இன்று கற்பனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் இருந்து வந்த இழுபறியான சூழ்நிலைகள் விலகும். பயணங்கள் வழியே நல்ல ஆதாயமும் லாபமும் அதிகரிக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |