நாளை புரட்டாசி சனிக்கிழமை அமாவாசையும் வரும் நாளில் இந்த வழிபாட்டை தவற விடாதீர்கள்

By Sakthi Raj Oct 09, 2026 07:48 AM GMT
Report

புரட்டாசி மாதம் என்றால் பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாக இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் விசேஷமானது.

அந்த வகையில், புரட்டாசி சனிக்கிழமையும் அமாவாசையும் ஒரே நாளில் இணைகின்ற பொழுது நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வதற்கும் பெருமாளுடைய அருளை பெறுவதற்கும் சனி பகவானுடைய அருளை பெறுவதற்கும் உகந்த நாளாக உள்ளது.

இதனால் நம்முடைய வீடுகளிலேயே சிறிய விளக்கு ஏற்றி இறைவனை மனதார நினைத்து வழிபாடு செய்தால் பல பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

நாளை புரட்டாசி சனிக்கிழமை அமாவாசையும் வரும் நாளில் இந்த வழிபாட்டை தவற விடாதீர்கள் | October 10 Purattasi Saturday Amavasya Worship

பாம்பின் வலியைப் போக்க உயிரையும் பணயம் வைத்த கோவிந்தன்.. இப்படியும் மனிதரா?

பாம்பின் வலியைப் போக்க உயிரையும் பணயம் வைத்த கோவிந்தன்.. இப்படியும் மனிதரா?

அதற்கு முதலில் ஒரு மண் அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது அரிசி மாவினால் செய்யப்பட்ட மாவிளக்கையும் பயன்படுத்தலாம். சுத்தமான நெய்யை அதில் ஊற்றி கொள்ள வேண்டும். பின்னர் நெய்யில் ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரமும் ஒரு கிராமம் சேர்ந்து விளக்கை ஏற்ற வேண்டும்.

மாலை 6 மணிக்கு பிறகு உங்களுடைய வீட்டின் பூஜை அறையிலோ அல்லது வீட்டில் வாசல் பகுதிகளிலும் இந்த விளக்கை நீங்கள் ஏற்றி பெருமாளை மனதார நினைத்து பக்தியுடன் வழிபாடு செய்யலாம். இவ்வாறு செய்கின்ற பொழுது பெருமாளுடைய அருளும் முன்னோர்களின் அருளும் கிடைக்கிறது.

நாளை புரட்டாசி சனிக்கிழமை அமாவாசையும் வரும் நாளில் இந்த வழிபாட்டை தவற விடாதீர்கள் | October 10 Purattasi Saturday Amavasya Worship

நவராத்திரி அம்பிகையை வீட்டிற்கு அழைக்கும் முன்பு இந்த 7 பொருட்களை அகற்றி விடுங்கள்

நவராத்திரி அம்பிகையை வீட்டிற்கு அழைக்கும் முன்பு இந்த 7 பொருட்களை அகற்றி விடுங்கள்

மேலும், நாம் நம்முடைய முன்னோர்களை மறக்கவே கூடாது அவர்களுக்கு உரிய மரியாதை செய்வது அவசியம். அவர்களை மனதில் நினைத்து விளக்கேற்ற வேண்டும். பெருமாளை பக்தியுடன் வழிபாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்யும் பொழுது நிச்சயமாக வீட்டில் நல்ல பலன் உண்டு. இதனை வீட்டு பூஜை அறை அல்லது வீட்டின் வாசல் பகுதியில் கட்டாயமாக ஏற்றலாம். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமை அமாவாசை சேர்ந்து வருவதால் இந்த வழிபாடு சிறப்பான பலன் கொடுக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US