நீங்கள் அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களா? உங்களுடைய சிறப்புகள் இதுதானாம்
எண் கணிதத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் நிறைந்தவை. அப்படியாக ஆங்கில மாதத்தில் பத்தாவது மாதமான அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களுடைய குண நலன்கள் எப்படி இருக்கும்? அவர்கள் எந்த விஷயங்களில் சிறந்து விளங்குவார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு சவால்களையும் எளிதாக சமாளித்து வெற்றி பெறக்கூடிய திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு போட்டி என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் எந்த ஒரு விஷயத்தையும் போட்டி மனப்பான்மையோடு அணுகி அதில் வெற்றி பெறுவார்கள்.
மேலும் இவர்கள் இயற்கையாகவே ஆளுமை திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். அதே சமயம் இவர்கள் அன்பு காதலில் ஈடுபாடு கொண்ட நபராக இருப்பார்கள். இவர்கள் தங்களுடைய உணர்வுகளை பிறரிடம் சொல்வதிலும் பிறர் உணர்வுகளை இவர்கள் புரிந்து கொள்வதிலும் வல்லவர்களாக இருப்பார்கள்.
அதேபோல் தோல்வி என்று வந்துவிட்டால் கூட மனம் உடைந்து போகாமல் அதில் இருந்து மீண்டு வருவதற்கான எல்லா வலிமையையும் இவர்கள் பெற்று இருப்பார்கள். முடிந்தவரை எந்த ஒரு சூழ்நிலையிலும் உண்மை பேச வேண்டும் என்று மன உறுதி கொண்டு இருப்பார்கள்.
அதேபோல் இவர்கள் பிறருடைய துன்பத்தை புரிந்து கொண்டு அவர்களுக்கு முன் வந்து உதவுவார்கள். பெற்றோர்களிடத்தில் இவர்கள் அதிக அன்பும் பாசமும் வைத்திருப்பார்கள். பெற்றோர்களுக்கு எந்த ஒரு விஷயத்தையும் இவர்கள் சிறப்பாக செய்து கொடுக்கக் கூடியவர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







