சனி பகவானின் அருளை பெற இந்த ஒரு விஷயம் செய்தால் போதுமாம்
நவகிரகங்களில் நீதிமானாக இருக்கக்கூடியவர் சனி பகவான். இவர் எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் ஒரு மனிதனுக்கு தண்டனையும் புகழையும் வணங்கக் கூடியவர். அப்படியாக சனி பகவான் உடைய சனி திசை காலங்களில் அல்லது ஏழரை சனி, ஜென்ம சனி காலங்களில் பலரும் பல வகையான துன்பங்களை அனுபவிக்ககூடும்.
அவர்கள் அந்த துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கு சனி பகவானை மனதார பற்றி கொண்டால் மட்டுமே விடுதலை கிடைக்கும். அப்படியாக சனி பகவானுடைய சனீஸ்வர அஷ்டகம் சொல்லி வழிபாடு செய்வதால் ஒருவருக்கு மிகச்சிறந்த பலன் கிடைப்பதாக சொல்கிறார்கள். அதாவது 8 ஸ்லோகங்களான அந்த அஷ்டகம் தசரத சக்கரவர்த்தியினால் திரேதாயுகத்தில்இயற்றப்பட்டதாகும்.
இந்த சனீஸ்வர அஷ்டகத்தில் சனிபகவானுடைய பெருமைகள் அனைத்தும் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் சனி பகவானின் தாக்கம் குறைய இந்த சனீஸ்வர அஷ்டகத்தை சனிக்கிழமை தோறும் சொல்லி வழிபாடு செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைப்பதாக சொல்கிறார்கள்.
அதோடு உளுந்து, வெல்லம் இவற்றை தானம் செய்து சனி பகவானை வழிபாடு செய்வதும் அவர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கும். மேலும், இந்த சனீஸ்வர அஷ்டகத்தில் சனிபகவானின் பதினோரு நாமங்கள் சொல்லப்படுகிறது. இதை அதிகாலையில் படிப்பது தான் மிக மிக விசேஷமானது என்று சொல்கிறார்கள்.
அதோடு சனிக்கிழமைகளில் அரச மரத்தடியில் அமர்ந்து இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வதும் நல்ல பலனை பெற்றுக் கொடுப்பதாக சொல்கிறார்கள்.
சனீஸ்வர அஷ்டகம்:
கோணாந்தகோ ரௌத்ரயமோ அத பப்ரு: க்ருஷ்ண:
சநி: பிங்கள ஏவ மந்த:
நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம்,
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய, ஸுராஸுரா:
கிம்புருஷா கணேந்த்ரா:
கந்தர்வ வித்யாதர கிந்நராச்ச,
பஜந்தி பீடாம் விஷம ஸ்திதேந,
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய,
தைலாயஸைர் மாஷ குட ப்ரதாநை:
ஸ்நாநைர் பலா லோத்ரபலைர் யவாத்யை:
ப்ரீணாதி ஸர்வாந் நிஜவாஸரே ய: தஸ்மை நம:
ஸ்ரீ ரவிநந்தநாய, ஸ்ரஷ்டா ஸ்வயம்பூர் புவநத்ரயஸ்ய,
த்ராதா ஹரி: ஸம்ஹரண:
பிநாகீ, ஏகஸ் த்ரிதா ருக்யஜு:
ஸாமமூர்த்தி:
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய,
நரா நரேந்த்ரா:
பசவோ ம்ருகேந்த்ரா: த்வந்யே ச யே கீடபதங்க ப்ருங்கா:
பீட்யந்தி வேதாஷ்ட ம்ருகஸ்திதேந, தஸ்மை நம:
ஸ்ரீ ரவிநந்தநாய,
தேசாச்ச துர்காணி வநாநி யத்ர,
க்ராமா நிவேசா:
புரபட்டநாநி, பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதேந,
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய,
ப்ரயாக கூலே யமுநாதடே ச,
ஸரஸ்வதீ புண்யஜலே குஹாயாம்,
யோ யோகிபி: த்யேயதமோ அதி ஸூக்ஷ்ம:
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய, மாஷைஸ் திலை:
கம்பள தேநுதாநை: லோஹேந நீலாம்பர தாநதோ வா,
ந பீடயேத் யோ நிஜவாஸரேண, தஸ்மை நம:
ஸ்ரீ ரவிநந்தநாய, அந்யப்ரதேசாத் ஸ்வக்ருஹம் ப்ரவிஷ்ட:
த்வதீய வாரேஷு ஸுகீ நர: ஸ்யாத்,
க்ருஹாத் கதோ யோ ந யத:
ப்ரயாதி, தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய,
சந்யஷ்டகம் ய: படதி ப்ரபாதே,
நித்யம் ஸுபுத்ரை: பசுபாந்தவைச்ச,
கரோதி ராஜ்யம் புவி போக ஸெளக்யம்,
ப்ராப்நோதி நிர்வாண பதம் ததாந்தே,
கோணஸ்த பிங்களோ பப்ரு:
க்ருஷ்ணோ ரௌத்ரோ அந்தகோ யம:
ஸெளரிச் சநைஸ்சரோ மந்த:
பிப்பலாதேந ஸம்ஸ்துத: ஏதாநி சநி நாமாநி ப்ராதருத்தாய ய:
படேத் சநைசசரருக்ருதா: பீடா: ந பவந்தி கதாசந.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







