12 ராசிகளின் முக்கியமான குணாதிசயங்கள்- இதனால் இவர்களை எல்லோரும் விரும்புவார்களாம்
நம்முடைய ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு. அப்படியாக, ஒவ்வொரு ராசிக்கும் உள்ள முக்கியமான நல்ல குணங்களால் பிறர் அவர்களை விட்டு விலக மாட்டார்களாம். அவ்வாறு 12 ராசிகளின் முக்கியமான நல்ல குணங்கள் என்னவென்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுடன் பழகும் பொழுது அவர்களுக்கு பயமே ஏற்ப்படாது. தைரியத்தை கொடுப்பார்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுடன் ஒரு முறை நட்பு ஏற்பட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் உறவில் இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொடுப்பார்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுடன் ஒரு முறை பேச ஆரம்பித்தால் நாம் வாழ்க்கையில் மறக்கமுடியாத அளவு ஞாபகங்களை கொடுத்து விடுவார்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுடன் நட்பு கிடைத்தால் இவர்களை போல் யாரும் இல்லை என்ற அன்பைக்கொடுப்பார்கள்.
சிம்மம்:
சிம்மம் ராசியினர் அவர்களின் கவர்ச்சியால் அவர்களை விட்டு பிரிய மனம் வராதவாறு செய்து விடுவார்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் நம்முடன் இருக்கும் பொழுது பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை தரும் நட்பாக இருப்பார்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுடன் பழகும் பொழுது அவர்களை வெறுக்க எந்த ஒரு காரணமும் கிடைக்காது.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களின் பேச்சு திறனால் அவர்களுடன் நட்பு வைத்துக்கொள்ள பலரும் விரும்புவார்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுடன் பழகும் பொழுது வாழ்க்கையே மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுடன் பழகும் பொழுது நாமும் அவர்களை போல் நன்றாக உழைக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுடன் பழகும் பொழுது நம்முடைய மன அழுத்தம் விலகி இறைவழிப்பாட்டில் ஆர்வம் அதிகம் ஆகும்.
மீனம்:
மீன ராசியினருடன் பழகும் பொழுது இவர்களை போல் மென்மையானவர்களையும் கருணை உள்ளம் கொண்டவர்களையும் நாம் பார்க்கமுடியாது போல் தோன்றும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |