வீட்டில் பணம் நிரம்பி வழிய உதவும் பச்சைப்பயிறு பரிகாரம்
பணக்கஷ்டம் என்பது பெரும்பாலோருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை.
பலர் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் பணக்கஷ்டத்துடன் போராடிக் கொண்டிருப்பார்கள்.
வீட்டில் பணக்கஷ்டம், வறுமையால் அவதிப்படுபவர்களுக்கு பச்சைப்பயிறு பரிகாரம் கை கொடுத்து உதவுகிறது.
பணம் பிரச்சனை தீர பச்சைப்பயிறு பரிகாரம்
பச்சரிசியுடன் பச்சைப்பயறு, வெல்லம் கலந்து, வீட்டு பூஜை அறையில் சுவாமி படத்திற்கு முன்புவைத்து, பசுமாட்டிற்கும் தானம் செய்யலாம். இதனால் கடன் தொல்லை விரைந்து தீரும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் வெந்தயம், பச்சை பயிறு எடுத்துஅதில் பச்சை கற்பூரத்தையும் போட்டு கலந்து பூஜையறையில் வைத்து, மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
பிறகு இந்த 3 பொருட்களையும் அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் தூவி, 3 வாரம் கழித்து கால் படாத இடத்தில் போட்டுவிட வேண்டும்.
இப்படி செய்து வருவதால், பணம் தங்குதடையின்றி வந்து சேரும் என்பது நம்பிக்கையாகும்.
அதேபோல, செவ்வாய்க்கிழமை இரவில் பச்சைப்பயிறை ஊற வைத்து, அதை மறுநாள் புதன்கிழமை பசு மாட்டுக்கு அல்லது பறவைகளுக்கு தானம் செய்யலாம்.
வாரந்தோறும் இப்படி புதன்கிழமைகளில் ஒரு கைப்பிடி பச்சைப்பயிறை தானம் வழங்குவதாலும் உங்கள் கடன் பிரச்சனை மெல்ல தீரும்.
மேலும், ஒரு கைப்பிடி பச்சை பயிறு, துளசி இலை, கொஞ்சம் வில்வம் இந்த மூன்றையும் வைத்து வீட்டு வாயிலில் கிழக்கு முகமாக நின்று, குடும்பத்திலுள்ள பெரியவர்களை வைத்து திருஷ்டி எடுக்க வேண்டும்.
இறுதியாக, கையிலுள்ள 3 பொருட்களையும் நெற்றியில் வேகமாக அடித்து, கீழே கொட்டிவிட வேண்டும்.
இப்படி செய்வதால், இதுவரை செயல்பாடுகளிலிருந்த முட்டுக்கட்டைகள், சறுக்கல்கள், தடங்கல்கள் அனைத்தும் நொறுங்கி விடும்.
புதன்கிழமையில் பச்சை பயிறை ஊறவைத்து நெய் மற்றும் சர்க்கரை பசுவிற்கு உணவாக தருவதால், வருமானம் பெருகி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |