தமிழ்நாட்டில் இருந்து பத்மஸ்ரீ விருது வாங்கிய முதல் ஓதுவார்... மோடி செய்த சம்பவம்

By Sakthi Raj Jun 05, 2026 05:00 AM GMT
Report

தமிழகத்தில் புகழ்பெற்ற ஓதுவார் மூர்த்திகளில் ஒருவரான பத்மஸ்ரீ திருத்தணி சுவாமிநாதன் ஐயா அவர்களின் வாழ்க்கை மற்றும் ஆன்மீக பயணம் பற்றி பார்ப்போம். மேலும், ஓதுவார் மரபில் முதன்முதலாக பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமை இவருக்கே சேரும்.

தஞ்சை மாவட்டத்தில் பிறந்த இவர் சிறு வயதில் இருந்து தேவார பாடல்கள் மீது அதிகம் ஈடுபாடு கொண்டிருக்கிறார். தருமபுரம் ஆதீனம் உட்பட்ட பல்வேறு இடங்களில் பல ஆண்டுகள் கடினமாக ஓதுவார் பயிற்சி பெற்று பண் முறைகளை முறையாக கற்றுக் கொண்டவர். சுமார் சுமார் 26 ஆண்டுகள் திருத்தணி ஆலயத்தில் ஓதுவாராக பணியாற்றி பிறகு ஓய்வு பெற்றார்.

இறைவனுக்காக பாடுவதே தன்னுடைய பணியாக வாழ்நாள் முழுவதும் கருத்தியவர். அதோடு இவருடைய ஆற்றல் மற்றும் திறமையை கண்டுகொண்ட புகழ்பெற்ற சொற்பொழிவாளர் வாரியார் சுவாமி அவர்கள் ஆரம்பத்திலேயே இவருடைய திறமைகளை பாராட்டியும் அவரை ஊக்குப்படுத்தியும் செய்திருக்கிறார்.

மேலும், அவர் தேவாரப் பாடல்களை பண் அமைப்பில் பாடுவதின் முக்கியத்துவத்தையும் அதன் அவசியத்தையும் நமக்கு வலியுறுத்துகிறார். நவீன மாற்றங்களை விட பாரம்பரிய மரபை இளைஞர்கள் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

அதுமட்டுமல்லாமல் அவர் வாங்கிய பத்மஸ்ரீ விருதை தனிப்பட்ட விருதாக பார்க்காமல் ஒட்டுமொத்த ஓதுவார் பாரம்பரியத்திற்கு கிடைத்த கௌரவமாக பார்க்கிறார். அப்படியாக, அவருடைய வாழ்க்கை வரலாறை இந்த காணொளி பார்த்து தெரிந்து கொள்வோம். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US