ஆண்டிக்கோத்தில் பழனி முருகனை தரிசிக்கலாமா?
பழனியில் வீற்றி இருக்கும் அறுபடை முருகன் கோயில்களில் மூன்றாம் படை வீடு ஆகும்.அங்கு பழனி முருகன் காலை மாலை என பல கோலங்களில் காட்சி தருகிறார்.
மேலும் அங்கு பழனி முருகனை ஆண்டி கோலத்தில் பார்த்து தரிசனம் செய்யும் பொழுது நாம் ஆண்டி ஆகி விடுவோம் என்று பொதுவான தவறான கருத்து நிலவி வருகிறது.
அது உண்மைதானா என்பது பற்றி பார்ப்போம்.
போகர் சித்தர் பழனி தண்டாயுதபாணி சிலை வடிவமைக்கும் போதே அவர் ஆண்டிக் கோலத்தில் தான் சிலையை வடிவமைத்தார்.
மேலும் ஆண்டி கோலத்தில் இருக்கும் முருகனை நாம் தொடர்ந்து மூன்று பௌர்ணமிகள் தரிசனம் செய்தால எப்பேர்ப்பட்ட தீராத பிரச்சனைகளையும் நமதுதீராத கர்ம வினைகளையும் தீர்த்து விடுவார் என்பது நிதர்சனமான உண்மை .
மேலும் முருகனின் வைத்தியநாதர் அலங்காரம் நோய் தீர்க்கும் அரு மருந்தாகும். நீண்டநாள் நோய்வாய்ப்பட்டவர்கள் வைத்தியநாதர் அலங்காரத்தில் முருகனை தரிசனம் செய்யும்பொழுது நிச்சயமாக நோயிலிருந்து விடுபடுவார்கள்.
நாமே நம்முடைய பிரச்சனைகளை உருவாக்கி இருப்போம். உருவாக்கிய பிரச்சனையில் இருந்து மீள முடியாமல் சிக்கலில் மாட்டி இருப்போம்.
அத்தகைய பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பவர் ராஜ அலங்கார முருகர் .சுய ஜாதகப்படி செவ்வாய் தசை நடப்பவர்கள்,ஜாதகத்தில் செவ்வாய் நீசம் பெற்றவர்கள்.
ஆண்டிக் கோலத்தில் இருக்கும் முருகனை மூன்று பௌர்ணமிகள் தரிசனம் செய்யும்பொழுது நல்ல பலன்களை குழந்தை தண்டாயுதபாணி நமக்கு அருள்வார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |