பழனியில் பங்குனி உத்திர திருவிழா.., வருகிற 26ஆம் தேதி கொடியேற்றம்

By Yashini Mar 12, 2026 05:54 AM GMT
Report

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழாவும் ஒன்று.

அந்தவகையில், இந்த வருடத்திற்கான திருவிழா வருகிற 26ஆம் தேதி பழனி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றததுடன் தொடங்குகிறது.

பங்குனி உத்திர திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வாகன வீதியுலா நடைபெறும்.

பழனியில் பங்குனி உத்திர திருவிழா.., வருகிற 26ஆம் தேதி கொடியேற்றம் | Palani Murugan Temple Panguni Uttara Flag Hoisting

வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டு கிடா, வெள்ளியானை, தங்க குதிரை, தங்க மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மார்ச் 31ஆம் தேதி நடைபெறும்.

அன்றைய தினம் இரவு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணமும், இரவு 9 மணி அளவில் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி சன்னதி வீதி, கிரி வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

பழனியில் பங்குனி உத்திர திருவிழா.., வருகிற 26ஆம் தேதி கொடியேற்றம் | Palani Murugan Temple Panguni Uttara Flag Hoisting  

பங்குனி உத்திர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி மாலை 4.20 மணி அளவில் நடைபெறும்.

மேலும், ஏப்ரல் 4ஆம் தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  

     

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US