பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

By Yashini May 16, 2024 03:32 PM GMT
Report

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா அறுபடை வீடுகளில் நடைபெறும்.

முருகனின் மூன்றாம் படைவீடான பழனியில் ஆண்டுதோறும் 10 நாட்கள் வைகாசி விசாக திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு திருவிழா உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இதையொட்டி காலையில் பெரியநாயகி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் | Palani Murugan Temple Vaikasi Visakam Festival

தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

அதையடுத்து வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி கொடிக்கட்டு மண்டபத்தில் எழுந்தருளினார். 

பின்னர் மண்டபத்தில் வைத்து விநாயகர் பூஜை, கொடிமரம், கொடிபடத்துக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

பின்னர் கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் | Palani Murugan Temple Vaikasi Visakam Festival

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி காலையில் தந்த பல்லக்கிலும், இரவில் தங்க மயில், வெள்ளி காமதேனு, யானை, தங்கக்குதிரை போன்ற முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை எழுந்தருளி வீதிவலம் வந்து அருள்பாலிக்கின்றனர். 

6-ம் திருநாளான 21-ந்தேதி இரவு 6 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

அடுத்த நாள் வைகாசி விசாக நாளன்று தேரோட்டம் நடைபெறுகிறது.

விழாவையொட்டி 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாலை 6.30 மணிக்கு மங்கல இசை, பக்தி சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US