பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்
சாஸ்திரங்கள் படி பல்லி விழுவதால் ஏற்படும் தீமைகளுக்கு பரிகாரம் உள்ளது.
பல்லி விழுந்தால், முதலில் செய்ய வேண்டியது குளித்து விட்டு வீட்டின் பூஜையறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம்.
அந்தவகையில், பல்லி நம் மேல் விழுவதால் கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
பல்லி விழுவதன் பலன்கள்
இடது கையில் விழுந்தால்- மன உளைச்சலை ஏற்படுத்தும்.
இடது கை விரல்களை உரசி சென்றால்- மன கவலையை ஏற்படுத்தும்.
ஏழையின் தலைமேல் விழுந்தால்- அவர் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ போகிறார்.
பணக்காரர் தலையில் விழுந்தால்- தனது செல்வத்தை இழக்க போகிறார்.
வலது காதில் விழுந்தால்- அவருக்கு நீண்ட ஆயுள் அதிகரிக்கும்.
இடது காதில் விழுந்தால்- அவரது ஆதாயம் மேம்படும்.
உதட்டிற்கு மேல் விழுந்தால்- அவரது செல்வம் அழிந்து போகும்.
உதட்டிற்கு கீழ் விழுந்தால்- பணக்கார வாழ்க்கையை வாழப் போகிறார்.
தொடைக்கு மேல் விழுந்தால்- பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
முன்னங்கால்களுக்கு இடையே விழுந்தால்- வாகனம் வாங்க வாய்ப்பு கிடைக்கும்.
பாதங்களுக்கு இடையே விழுந்தால்- வாழ்க்கை துணையுடான உறவு அழியும்.
இடது பகுதியில் விழுந்தால்- மரணம் கொண்டு துன்பத்தை அனுபவிக்க போகிறார்.
ஆண்களுக்கு பல்லி விழுவதன் பலன்கள்
முகத்தின் மேல் விழுந்தால்- அவருக்கு நல்ல நிதி லாபத்தை கிடைக்கும்.
இடது கண்ணின் விழுந்தால்- சகுனமாகும்.
வலது கண்ணில் விழுந்தால்- இழப்பு மற்றும் தோல்வி வரும்.
நெற்றியில் விழுந்தால்- பிரிவு ஏற்படும்.
வாய் மேல் விழுந்தால்- ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.
கால் விரல்களில் விழுந்தால்- நோய் ஏற்படும்.
மீசையின் மேல் விழுந்தால்- தடைகள் வரபோகிறது.
இடது கைவிரல் நகங்களில் விழுந்தால்- செல்வத்தை அதிகரிக்கும்.
வலது கைவிரல் நகங்களில் விழுந்தால்- தேவையில்லாத செலவுகள் வரும் என்று அர்த்தம்.
இடது காலில் விழுந்தால்- இழப்புகள் ஏற்பட போகிறது.
காலில் பின்புறத்தில் விழுந்தால்- பயணத்தைக் குறிக்கிறது.
காலின் மேல் விழுந்தால்- கஷ்ட காலம் வரும்.
பெண்களுக்கு பல்லி விழுவதன் பலன்கள்
வலது கண்ணில் விழுந்தால்- மனக்கவலை, பதட்டம் அதிகரிக்கும்.
இடது கண்ணில் விழுந்தால்- வாழ்க்கை துணை அவளிடம் அதிக அன்பாக இருக்கப் போகிறார்.
உதட்டின் மேல் விழுந்தால்- பிரச்சனை ஏற்படும்.
உதட்டின் கீழ் விழுந்தால்- நல்ல செய்தி கிடைக்கும்.
முதுகு பகுதியில் விழுந்தால்- இறப்பு செய்தியை கேட்கப் போகிறார்.
கையில் விழுந்தால்- நல்ல நிதி நிலைமை ஏற்படும்.
தோள்பட்டையில் விழுந்தால்- நிறைய ஆபரணங்கள் கிடைக்கும்.
கால் விரல்களில் விழுந்தால்- ஆண் குழந்தை பிறக்கப் போகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |