உள்ளங்கையில் கோடு இப்படி இருக்கா? அப்போ பணத்தை சேமிக்க முடியாது
எவ்வளவு அதிகமாக சம்பாதித்தாலும் ஒரு சில நபர்களால் அவர்களின் வருமானத்தை முறையாக பயன்படுத்த முடிவது இல்லை மற்றும் சேமித்து வைக்க முடிவது இல்லை.
நிதி ரேகை
கைரேகை நிபுணர்களின் கூற்றுப்படி இதற்கு காரணமாக தனி நபரின் கையில் இருக்கும் ‘விதி ரேகை’ அல்லது ‘நிதி ரேகை’ கூறப்படுகிறது.

மணிக்கட்டில் தொடங்கி நடுவிரலை நோக்கி நீளமாக செல்லும் இந்த விதி ரேகை, ஒருவரின் விதியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த நிதி ரேகை ஆனது, உங்கள் உள்ளங்கையில் மோதிர விரலுக்கு கீழே உள்ள சூரிய மலை பகுதியில் இருந்து, மணிக்கட்டு நோக்கி சென்று இதய ரேகை மற்றும் தலை ரேகையைக் கடக்கும். குறித்த இந்த ரேகை ஆனது மெல்லிய கோடாகவும் - வளைவுகள் அதிகம் நிறைந்தும் காணப்பட்டால், அந்த ஒரு நபர் பணத்தை சேமிப்பதில் அதிக சிரமங்களை சந்திப்பார்.
நிதி ரேகையின் மீது மற்றொரு ரேகை குறுக்கிட்டால், அது திடீர் செலவுகளை குறிக்கும். குறிப்பாக, எதிர்பாராத மருத்துவ செலவுகளை கொண்டு வரும். தொழில் வாழ்க்கையில் கஷ்டங்கள் அதிகரிக்கும், செய்யும் முதலீடுகள் எதிர்பார்ப்பு மாறாக நட்டங்களை கொண்டு வரும்.
பண ரேகையில் இடைவெளி இருப்பது, ரேகை சிதைந்திருப்பதற்கு நிகராக ஒப்பிடப்படுகிறது. தனி ஒரு நபரின் உள்ளங்கையில் இந்த பண ரேகை சிதைந்திருப்பது அவர்களின் வருமானத்தை பாதிக்கும்.
நிதி ரேகை ஆழமாகவும் - தெளிவாகவும் அதேநேரம் நேராகவும் இருப்பின், நீங்கள் ஒரு கடின உழைப்பாளியாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். கடின உழைப்பின் மூலம் பணத்தை அதிகம் சம்பாதிப்பீர்கள், தேவையற்ற செலவுகளை குறைத்து உங்கள் சேமிப்புகளை அதிகரிப்பீர்கள்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அரிசி அல்லது பால் போன்ற வெள்ளை நிறம் கொண்ட உணவு பொருட்களை தானமாக அளித்து வர உங்கள் நிதி நிலையில் காணப்பட்ட பிரச்சனைகள் தீரும்