2026 பஞ்சகிரஹி ராஜயோகம்: 100 ஆண்டுகளுக்கு பிறகு கோடீஸ்வர யோகம் பெரும் ராசிகள்

By Sakthi Raj Feb 09, 2026 10:24 AM GMT
Report

ஜோதிடத்தில் பல்வேறு காலங்களில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடப்பதை நான் காணலாம். அதாவது ஒரே நேரத்தில் பல கிரகங்கள் ஒரே ராசியில் அமரக்கூடிய ஒரு அரிய நிகழ்வுகளும் அவ்வப்போது நடக்கும். அந்த சேர்க்கை ஏற்படும் போது ஒரு யோகம் ஆக கருதப்படுகிறது. அது ஒரு சில ராசிகளின் மீது பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்து அவர்களுக்கு பொருளாதார வாழ்க்கையில் முன்னேற்றம் போன்ற ஒரு நல்ல தாக்கத்தை முடிவு செய்கிறது.

மேலும் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்பு வாய்ந்த மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் பஞ்சகிகிரஹி உருவாக போகிறது. அதாவது ஐந்து கிரகங்கள் ஒரே நேரத்தில் ஒரே ராசியில் நகர்கின்றது.

அப்படியாக பிப்ரவரி 17 அன்று சூரியன், புதன் சுக்கிரன், சனி மற்றும் சந்திரன் ஆகியவை கும்ப ராசியில் ஒன்றாக இணைகிறார்கள். இது மிகவும் சக்தி வாய்ந்த சேர்கையாக கருதப்படுகிறது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிகழ்வு ஒரு அற்புதமான யோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் எந்த ராசியினர் மிகப்பெரிய அளவில் நன்மை பெற போகிறார்கள் என்று பார்ப்போம்.

2026 பஞ்சகிரஹி ராஜயோகம்: 100 ஆண்டுகளுக்கு பிறகு கோடீஸ்வர யோகம் பெரும் ராசிகள் | Panchagrahi Rajyoga Brings Luck To This Zodiac

கன்னி ராசியினர் இதை செய்தால் யோகம் அவர்களை தேடி வருமாம்

கன்னி ராசியினர் இதை செய்தால் யோகம் அவர்களை தேடி வருமாம்

மேஷம்:

இந்த யோகமானது ஒரு மிகப்பெரிய செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறது. எதிர்பாராத இடத்தில் பொருளாதார வளர்ச்சி நீங்கள் அடைவீர்கள். வருமானம் உயர்த்துவது பற்றிய ஆலோசனை வெற்றிகரமாக அமையும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலனும் அங்கீகாரமும் பெறக்கூடிய காலகட்டமாகும். புதிய தொழில் தொடங்குவது பற்றி ஆலோசனை செய்வீர்கள்.

மிதுனம்:

மிதுன ராசியினருக்கு இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை தனிநபர் வாழ்க்கையில் உண்டு செய்ய போகிறது. நீண்ட நாட்களாக தைரியமாக ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்ற தயங்கி கொண்டிருப்பவர்களுக்கு துணிச்சலாக ஒரு முடிவு எடுத்து முன்னோக்கி செல்லக்கூடிய ஒரு அமைப்பு உருவாக போகிறது. குடும்பத்தில் பெற்றோர்களுடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும்.

2026 சூரியன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு தலைவிதியே மாறப்போகிறதாம்

2026 சூரியன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு தலைவிதியே மாறப்போகிறதாம்

சிம்மம்:

சிம்ம ராசியினருக்கு இந்த யோகமானது மிகப்பெரிய அளவில் வியாபாரத்தில் ஒரு தாக்கத்தை கொண்டு சேர்க்க போகிறது. புதிய முதலீடு செய்வது பற்றி யோசனை செய்வீர்கள். வியாபாரத்தை விரிவு படுத்துவதை பற்றியும் சிந்தனை உண்டாகும். தொழில் ரீதியாக நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும்.

கன்னி:

கன்னி ராசியினருக்கு இந்த யோகமானது அவர்களுக்கு புதிய நட்புகளின் அறிமுகத்தை கொடுக்கப் போகிறது. சொந்தங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்க போகிறீர்கள். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் இருந்த மன கசப்புகள் விலகும். தொலைதூரம் சென்று படிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்புகள் உருவாகும். வங்கி தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US