இன்றைய ராசிபலன் (19-03-2025)
மேஷம்:
இன்று முக்கியமான வேலைகளை மதியத்திற்கு முன் முடித்து விடுங்கள். அதன்பிறகு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை அவசியம். இரவுகளில் வெளியூர் பயணம் செய்வதை தவிர்க்கவும்.
ரிஷபம்:
இன்று உங்கள் வியாபரம் முன்னேற்றம் அடையும். ஒரு சிலருக்கு மனதில் குடும்ப பிரச்சனையால் விரக்தி உண்டாகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
மிதுனம்:
மனதில் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் குழப்பம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். மனைவி வழி உறவால் நன்மை உண்டாகும்.
கடகம்:
வியாபாரத்தில் முழுமையான கவனம் செலுத்துவதால் எண்ணம் நிறைவேறும். பொருளாதார நெருக்கடி விலகும். உழைப்பாளர்கள் போராடி வெற்றிபெற வேண்டியதாக இருக்கும்.
சிம்மம்:
அலுவலகத்தில் உங்களுடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சகோதரன் வழி உறவால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.
கன்னி:
சிலருக்கு கண்களில் சில பாதிப்புகள் உண்டாகலாம். தொழில் ரீதியாக பிறரிடம் உதவி கேட்பதை தவிர்க்க வேண்டும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் உண்டாகும். நன்மையான நாள்.
துலாம்:
இன்று மனதில் அம்பாளின் வழிபாட்டால் நன்மை பெறுவீர்கள். அலுவலக்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்:
வியாபாரத்தில் லாபம் உண்டாகும். புதிய முயற்சியில் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாராத செலவுகளை சமாளிப்பீர். நீங்கள் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.
தனுசு:
இன்று மதியம் மேல உங்களுக்கு நற்செய்தி வந்து சேரும். பிறருக்கு யோசிக்காமல் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். குடும்பத்தினர் உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வார்கள்.
மகரம்:
நீண்ட நாள் கனவு நினைவாகும். ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் தோன்றலாம். வியாபாரத்தை விரிவு செய்வதை பற்றி சிந்திப்பீர்கள். அதிர்ஷ்டமான நாள்.
கும்பம்:
நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு முயற்சியை மேற்கொண்டு ஆதாயம் காண்பீர். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும். உங்கள் செயல்களில் இன்று தடைகள் தோன்றலாம்.
மீனம்:
இன்று உடல் சோர்வால் அவதி படுவீர்கள். பெரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகள் எடுப்பதில் சில சிரமம் உண்டாகும்.வெளியூர் பயணம் தவிர்ப்பது நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |