இன்றைய ராசி பலன்(20-03-2025)
மேஷம்:
இன்று விழிப்புடன் செயல்படவேண்டிய நாள். எதையும் ஆராய்ந்து செயல்படுவீர்கள். தேவை இல்லாத விஷயங்களில் மனதை அலை பயவிட வேண்டாம். உணவுகளில் கட்டுப்பாடு தேவை.
ரிஷபம்:
இன்று எதிர்பாராத நபரால் சில சிக்கல் உண்டாகலாம். சிலருக்கு குடும்பத்தில் வாக்கு வாதம் அதிகரிக்கும். திருமணம் சம்பந்தமான பேச்சு மன நிறைவை கொடுக்கும்.
மிதுனம்:
வீட்டில் தேவை இல்லாத பிரச்சனை குழப்பங்கள் உருவாகும். தாய் வழி உறவால் சிக்கல் உண்டாகும். வேலையில் மிக கவனமாக செயல்படுவதால் வரும் எதிர்ப்புகளை தவிர்க்கலாம்.
கடகம்:
மனக்குழப்பம் நீங்கும். உறவினர்கள் ஆதரவால் வேலை நடந்தேறும். உழைப்பவர்கள் நிலை உயரும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும்.
சிம்மம்:
தொழில் செய்யும் இடத்தில் குடும்ப பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. சகோதரி வழியில் நல்ல ஆதரவு கிடைக்கும். பிரிந்து சென்ற சொந்தங்கள் உங்களை தேடி வருவார்கள்.
கன்னி:
திருமண வாழ்க்கையில் உண்டான பிரச்சனை சரி ஆகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டுகொள்வீர்கள். மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.
துலாம்:
மனதில் தெய்விக சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். வேலையில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். மதியம் மேல் கொஞ்சம் நிதானம் கடைபிடிப்பது நன்மை தரும்.
விருச்சிகம்:
உங்கள் தொழில் குறித்த ரகசியங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். நினைத்த வேலையை நடத்தி முடிப்பீர். நேற்றைய கனவு நனவாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
தனுசு:
இன்று திடீர் செலவுகளை சந்திக்கலாம். சிலருக்கு சொந்தங்களால் சில மனசங்கடம் உருவாகும். தொலைந்த பொருள் எதிர்பாரா விதமாக கிடைத்து விடும். நன்மையான நாள்.
மகரம்:
வராமல் இருந்த பணம் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் லாபமாகும். உங்கள் செல்வாக்கு உயரும். உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்வீர்.
கும்பம்:
நீங்கள் எதிர்பார்த்த பணம்வரும். உங்கள் வேலை ஆதாயத்தில் முடியும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். சிறு வியாபாரிகள் நன்மை அடைவர். குடும்பத்தில் நெருக்கடிவிலகும்.
மீனம்:
பெரிய மனிதர்கள் உதவியால் சில முக்கியமான காரியம் நடைபெறும். குழந்தைகள் பற்றி சில புரிதல் உருவாகும். எதையும் நிதானமாக செய்ய மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |