இன்றைய ராசி பலன்(23-03-2025)
Report this article
மேஷம்:
பெரியவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். உங்கள் முயற்சி வெற்றிகரமாக அமையும். எதையும் பல முறை யோசித்து செயல்படுவீர்கள்.
ரிஷபம்:
இன்று வெளியூர் பயணம் உங்களுக்கு அலைச்சல் உண்டாக்கும். வீட்டில் சில மனஸ்தாபம் உண்டாகலாம். மனதை அலைபாயாமல் பார்த்து கொள்வது அவசியம்.
மிதுனம்:
இன்று உங்களுக்கு வாழ்க்கையை பற்றிய புரிதல் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். ஆழ்ந்து சிந்தித்து செயல்படுவதால் நன்மை உண்டாகும்.
கடகம்:
உடல் நிலையில் முன்னேற்றம் கிடைக்கும். முயற்சிகளை கவனமாக கையாள்வதால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நினைப்பதை நடத்தி முடிப்பீர்.
சிம்மம்:
மனதில் இருந்த குழப்பம் விலகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செயல்களில் கூடுதல் கவனம் செலுத்துவது மேலும் நன்மையாகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
கன்னி:
வாங்கிய கடனை அடைப்பீர்கள். உங்கள் அணுகுமுறையால் நன்மை உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத வாய்ப்புகள் தேடி வரும். மனதில் உங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம்:
இன்று மனதில் தெளிவும் நம்பிக்கையும் பிறக்கும். உங்களுக்கான பிரச்சனை நல்ல முடிவை பெரும். வேலையில் முழு பங்களிப்பை கொடுப்பீர்கள். இறைவழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம்:
சொத்து வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். சூழ்நிலையை அறிந்து செயல்பட்டு லாபம் காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தை விரிவு செய்வதில் கவனம் செல்லும்.
தனுசு:
இன்று மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந் பிரச்சனை உங்களை விட்டு விலகும்.
மகரம்:
உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். அலைச்சலால் சோர்வு அடைவீர். மனம் குழப்பமடையும். செலவிற்கேற்ற வரவு வரும்.
கும்பம்:
பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். சிலர் உங்களுக்கு எதிராக செய்தாலும் அதை விரைவில் நிறைவேற்றுவீர்கள்.
மீனம்:
மனதில் அதிகப்படியான சிந்தனை மேலோங்கும். எதிர்கலாத்தை பற்றிய சிந்தனை உங்களுக்கு மன கவலைகள் உண்டாக்கும். எதையும் தெளிவாக சிந்தித்து செயல்படுவதால் நன்மை உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |