இன்றைய ராசி பலன்(21-03-2025)
மேஷம்:
இன்று உங்கள் பொருளாதாரா சூழ்நிலை புரிந்து கொண்டு செய்லபடுவது நன்மை தரும். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். மனதில் நிம்மதி உருவாகும்.
ரிஷபம்:
உங்களுக்கு இன்று எதிர்பாராத பரிசு வந்து சேரலாம். வண்டி வாகனத்தில் கவனமாக இருக்கவேண்டும். இறைவழிபாட்டில் ஈடுபாடு செலுத்துவீர்கள். நட்பு வட்டாரம் விரிவு அடையும்.
மிதுனம்:
வியாபாரத்தில் இருந்த போட்டியாளர்கள் விலகி செல்வார்கள். வழக்கு விஷயம் உங்களுக்கு எதிராக திரும்பலாம். எதையும் ஒருமுறைக்கு இரு முறை யோசித்து செயல்பட வேண்டும்.
கடகம்:
பெரியவர்கள் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். மனதில் உள்ள குழப்பம் விலகும். மனைவி வழி உறவால் நல்ல ஆதாயம் பெறுவீர்கள். நன்மையான நாள்.
சிம்மம்:
உங்களைச் சுற்றி இருப்பவர்கள் பற்றி தெரிந்து கொள்வீர். அதிரடியாக ஒரு செயலில் இறங்குவீர். மனம் தெளிவடையும். நினைத்ததை நினைத்தபடி நடத்துவீர்.
கன்னி:
குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். சகோதரன் வழி உறவுகளிடம் கவனமாக இருக்க வேண்டும். எதையும் துணிந்து செயல்படுவீர்கள். வியாபாரம் உங்களுக்கு லாபத்தை பெற்று கொடுக்கும்.
துலாம்:
இன்று மனதில் தேவை இல்லாத குழப்பம் உண்டாகும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். வீடுகளில் உண்டான குழப்பம் விலகும். தொழில் வளர்ச்சி அடையும்.
விருச்சிகம்:
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். வெளியூர் பயணத்தில் நெருக்கடிகள் ஏற்படும். மனதில் குழப்பம் உண்டாகும்.
தனுசு:
இன்று உங்களுக்கு குழந்தைகள் உறுதுணையாக இருப்பார்கள். இருந்தாலும் மதியம் மேல் உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.
மகரம்:
எதிர்பார்த்த பணம் வரும். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். புதிய நட்பால் விருப்பம் நிறைவேறும். நேற்றைய எண்ணம் பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும்.
கும்பம்:
எந்தவொரு வேலையையும் யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். அனைத்திலும் உங்கள் நேரடிப்பார்வை இருப்பது அவசியம். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும்.
மீனம்:
நீங்கள் எதிர்பார்த்த தகவல் உங்களை வந்து சேரும். பிள்ளைகள் பற்றி அறிந்து கொள்வீர்கள். சிலருக்கு வெளியூர் பயணத்தால் மன கஷ்டம் உண்டாகலாம். கவனம் அவசியம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |