வசந்த நவராத்திரி: சுபயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்
சோபகிருது வருடம் பங்குனி 27 செவ்வாய்கிழமையான இன்று பங்குனி மாதத்தின் சுக்ல பஷ பிரதமை திதியாகும்.
சந்திரன் மீனம், மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். லக்ஷ்மி நாராயண யோகம், சர்வார்த்த சித்தி யோகம், அமிர்த சித்தி யோகம், ரேவதி நட்சத்திரம் ஆகிய மூன்றும் இணைவதால் இன்றைய நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வசந்த நவராத்திரியின் முதல் நாளான இன்று 5 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறவிருக்கிறார்கள்.
மிதுனம்
பணியிடத்தில் முன்னேற்றம் உண்டு, நீ்ங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வு கிடைக்கப்பெறலாம், செல்வாக்கு அதிகரிக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், பணவரவு இருப்பதால் நிதி நிலைமையில் இருந்த சிக்கல்கள் நீங்கலாம்.
சிம்மம்
புதிய தொழில் தொடங்க/ முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள நபர்கள் தாராளமாக தொடங்கலாம், சொத்துக்கள் வாங்கலாம், பணியிடத்தில் சக ஊழியர்களின் பாராட்டை பெறுவீர்கள், சமூகத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும்.
கன்னி
புத்திசாலித்தனமாக செயல்பட்டு காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள், செல்வம் அதிகரிக்கும், எதிரிகளை எளிதாக வென்றுவிடுவீர்கள், நீண்டநாட்களாக எதிர்பார்த்த காரியம் முடிவுக்கு வரும்.
மகரம்
வெற்றி இலக்கை அடைவீர்கள், சமூகத்தில் மதிப்பு, அந்தஸ்து உயரும், ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள், முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும், குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியான நிம்மதியான சூழல் நிலவும்.
கும்பம்
நண்பர்கள், குடும்பத்தினருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள், திட்டமிட்ட காரியங்கள் முடிவுக்கு வரும், சேமிப்பு அதிகரிக்கும், தொழிலில் முன்னேற்றம் உண்டு, மனதுக்கு பிடித்த காரியங்களில் ஈடுபடுவீர்கள்.