பங்குனி உத்திரம் 2024 எப்போது?
தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் மிக சிறப்பு வாய்ந்ததாகும்.
உங்களை நீங்களே முதன்மையான மனிதராக மாற்றிக்கொள்வதற்கும், இல்லறம் எனும் நல்லறத்தை ஏற்பதற்கும் இந்நன்னாளில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.
ஏனெனில் இது தெய்வத்திருமணங்கள் நடைபெற்ற நாளாகும், முருகப்பெருமான்- தெய்வானை திருமணம், ராம்பிரான்- சீதை திருமணம், மீனாட்சி- சொக்கநாதர் திருமணம் நடைபெற்றது இந்நாளில் தான் என புராணங்களில் கூறப்படுகிறது.
எனவே பங்குனி உத்திர நாளில், விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் வாழ்வு சிறக்கும்.
2024ம் ஆண்டு இந்நாள் மார்ச் 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. மறுநாள் (திங்கள்) காலை 10.59 மணிவரை உத்ரம் நட்சத்திரம் உள்ளது.
அன்றைய தினத்தில் வள்ளி- தெய்வானை முருகப்பெருமான்படத்துடன் பஞ்சமுக விளக்கேற்ற வேண்டும்.
முருகனே!
செந்தில் முதல்வனே!
மாயோன் மருகனே, ஈசன்மகனே!
ஒருகைமுகன் தம்பியே!
நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன்
நான்!
என மனதுருக பாடி நம்பிக்கையுடன் வழிபட்டு நற்பலன்களை பெற்றுக்கொள்ளுங்கள்.