செய்வினை கோளாறுகள் நீங்க செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள்
இந்த உலகத்தில் சில விஷயங்கள் நம்மை அச்சத்தில் ஆழ்த்தக்கூடியதாக இருக்கிறது. அதில் ஒன்று தான் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்றவை. இவை பெரும்பாலும், ஒருவரை நேர்மையாக வீழ்த்த முடியாமலும், நேருக்கு நேர் போட்டியிட முடியாமல் இருப்பவர்களாலே கை எடுக்கக்கூடிய ஆயுதமாக இருக்கிறது.
இதை சமயங்களில் நாம் கெட்ட நேரம் என்றும் சொல்லலாம். ஒருவருக்கு நேரம் சரி இல்லை என்றால் அவருக்கு எதிராக செய்யப்படும் எந்த ஒரு காரியமும் எளிதாக நடந்து விடும்.
அந்த வகையில் யாராவது தங்களுக்கு செய்வினை வைத்தது போல் உணர்ந்தாலோ, அல்லது வீடுகளில் நேரம் சரி இல்லாமல் எதிர்மறை சக்திகள் சூழப்பட்டது போல் தெரிந்தாலோ பயம் கொள்ளாமல் செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள் பற்றிப் பார்ப்போம்.
இந்த பூமியில் எந்த ஒரு பிரச்சன்னையும் நம்பிக்கை என்னும் ஒரு விஷயத்தால் கட்டாயம் ஜெயிக்க முடியும். அதற்கு நாம் முழுமையாக நம்ப வேண்டும்.
அவ்வாறு தீய சக்திகள் தொல்லை இருப்பது போல் உணர்ந்தால் ஒரு அமாவாசை நாளன்று உங்கள் ஊர் எல்லையில் இருக்கக்கூடிய காவல் தெய்வம் அல்லது உங்கள் காவல் தெய்வம் கோயிலுக்கு சென்று அந்த தெய்வத்திற்கு சிவப்பு நிற வஸ்திரம், குங்குமம், பூசணிக்காய், சேவல் இவை அனைத்தையும் காணிக்கையாக கொடுக்கவேண்டும்.
பிறகு, அங்கு இருந்து கோயில் பிரசாதமாக எலுமிச்சை வாங்கி, அதை வீட்டிற்கு கொண்டு வந்து அதை இரண்டாக அரிந்து சாறு பிழிந்து வீடுகளில் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது அந்த காவல் தெய்வத்தின் வாசனையால் அந்த வீடுகளில் உள்ள எதிர்மறை சக்திகள், செய்வினை போன்ற கோளாறுகள் விலகும்.
அதோடு, வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது இரு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி, நான்கு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி சக்கரங்களுக்கு அடியில் எலுமிச்சை பழத்தை வைத்து செல்வது நமக்கு பாதுகாப்பாக அமையும்.
இந்த பரிகாரம் செய்வதால் நம் வாழ்க்கையில் எந்த ஒரு குறையும் வரப்போவதில்லை மாறாக நல்ல வளர்ச்சியும் ஏற்றமும் கிடைக்கும். ஆக, செய்வினை கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருக்கலாமோ என்று அச்சம் கொள்வதை தவிர்த்து முழு நம்பிக்கையோடு பரிகாரங்கள் செய்து பாருங்கள் நல்ல மாற்றம் பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |