திருமண யோகம் அருளும் வள்ளி கல்யாண பாடல்
ஒவ்வொரு மனிதனுக்கும் கட்டாயம் ஒரு வயதை கடந்த பிறகு வாழ்க்கை துணை என்பது மிகவும் அவசியமாகிறது. இருந்தாலும் அவர்களுக்கு ஏற்ப வாழ்க்கை துணை அமைவதில் பலரும் பல சங்கடங்களை சந்திக்கின்றனர்.
அந்த வேளையில் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் தடங்களை கடந்து செல்ல அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது இறைவன் மட்டுமே.
அப்படியாக, கலியுக வரதன் முருகப்பெருமான் மிகவும் சக்தி நிறைந்தவர். அவரின் துணைவியான வள்ளி தேவியை திருமணம் வரன் தேடிக்கொண்டு இருப்பவர்கள் மனதார வழிபாடு செய்து வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும்.
அதாவது, எவர் ஒருவர் வள்ளி தேவியின் திருமணத்தை நம்பிக்கையோடு படிக்கிறார்களோ அவர்களுக்கு சிறந்த அறிவும், அழகும், நல்ல குணம் படைத்த வாழ்க்கை துணையும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அவ்வாறு வள்ளி தேவியின் திருமணத்தை முழுவதுமாக பாராயணம் செய்யமுடியாதவர்கள் இந்த பாடலை பாடி வழிபாடு செய்து வந்தால் விரைவில் முருகன் மற்றும் வள்ளி தேவியின் அருளால் அவர்களுக்கு நன்மை நடக்கிறது என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
பாடல்:
அன்னதோர் வேளை தன்னில் ஆறுமுக முடைய வள்ளல்
தன்னுழை இருந்த நங்கை தனையரு ளோடு நோக்கக்
கொன்னவில் குறவர் மாதர் குயிற்றிய கோலம் நீங்கி
முன்னுறு தெய்வக் கோலம் முழு தொருங்குற்ற தன்றே!
அந்த நல் வேளை தன்னில் அன்புடையக் குறவர் கோமான்
கந்த வேற் பாணி தன்னில் கன்னிகை கரத்தை நல்கி
நந்தவ மாக்கி வந்த நங்கையை நயப்பால் இன்று
தந்தனன் கொள்க வென்று தண்புனல் தாரை உய்த்தான்.
நற்றவம் இயற்றுத் தொல்சீர் நாரதன் அனைய காலைக்
கொற்றம துடைய வேலோன் குறிப்பினால் அங்கியோடு
மற்றுள கனுந் தந்து வதுவையின் சடங்கு நாடி
அற்றமது அடையா வண்ணம் அருமறை விதியாற் செய்தான்.
திருமணத்திற்காக வரன் தேடுபவர்கள் தினமும் காலை மாலை மனதார தங்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையவேண்டும் என்று எண்ணி முருகப்பெருமானிடமும் வள்ளி தேவியிடமும் வேண்டுதல் வைத்து இதை பாடி வர விரைவில் வீட்டில் மங்கள சத்தம் ஒலிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |